திருவள்ளூர்:திருவள்ளூர், வி.எம்.நகர் பகுதியைச் சேர்ந்தவர் கணேசன் மகன் கார்த்திக்கேயன்,45. இவர், கடந்த 2ம் தேதி இரவு தன் வீட்டை பூட்டிவிட்டு வெளியில் சென்று விட்டார்.
மறுநாள் காலை வந்து பார்த்த போது, அவரது வீட்டின் முன்பக்க 'கிரில் கேட்' மற்றும் கதவின் பூட்டு உடைக்கப்பட்டிருந்தது.
வீட்டிற்குள் சென்று பார்த்தபோது, பீரோவில் வைத்திருந்த, 30 சவரன் தங்க நகை திருடு போயிருந்தது தெரிந்தது.
இது குறித்து, கார்த்திக்கேயன் அளித்த புகாரையடுத்து, திருவள்ளூர் டவுன் போலீசார் வழக்குப்பதிந்து, நகையை திருடிச் சென்றவர்களை தேடி வருகின்றனர்.