நேமம்:வெள்ளவேடு அடுத்த, குத்தம்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்தவர் விக்ரமன், 33. தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்த இவர், நேற்று முன்தினம் மாலை அருகில் உள்ள நேமம் ஏரியில் குளிக்கச் சென்றார்.
நீச்சல் தெரியாததால் ஏரியில் மூழ்கி பலியானார்.
தகவலறிந்த செவ்வாப்பேட்டை போலீசார், உடலைக் கைப்பற்றி திருவள்ளூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இது குறித்து இவரதுமனைவி சோனியா அளித்த புகாரையடுத்து, வெள்ளவேடு போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.
கழுத்து வலியால் அவதிப்பட்டு வந்த விக்ரமன், தண்ணீரில் நீச்சல் அடித்து பழகுங்கள் என மருத்துவர் ஒருவர் அறிவுரை கொடுத்ததாக கூறப்படுகிறது.
இதையடுத்து, ஏரியில் நீச்சல் பழக சென்றபோது பலியானதாக விசாரணையில் தெரிய வந்ததாக வெள்ளவேடு போலீசார் தெரிவித்தனர்.