திருவாலங்காடு:திருவாலங்காடு ஒன்றியம், நெடும்பரம் கிராமத்தில், ஜெயா வேளாண் கல்லுாரி மாணவியர் கொம்பு சாண உரம் தயாரிப்பு முறையை விவசாயிகளிடம் விளக்கினர்.
மாட்டு சாணத்தை கொண்டு மாட்டு கொம்பினுள் புகற்றி அதை நேராக மண்ணில் ஆறு மாத காலம் புதைக்க வேண்டும். பின் அந்த கொம்பினுள் இருக்கும் உரத்தை எடுத்து நீரில் கரைத்து விவசாய நிலத்தில் தெளிக்கலாம்.
அப்படி தெளிக்கும் போது, சிறந்த முறையில் பயிர்கள் வளரும். கூடுதல் மகசூல் கிடைக்கும். இந்த செயல்முறையை மாணவியர் விவசாயிகளிடம் விளக்கினர்.
இதில், நெடும்பரம் கிராமத்தில் இருந்து, 50க்கும் மேற்பட்ட விவசாயிகள் பங்கேற்று பயன் பெற்றனர்.