திருவாலங்காடு:திருவாலங்காடு ஒன்றியம், ராமாபுரம் ஊராட்சி காலனியில், 30க்கும் மேற்பட்ட குழந்தைகள் ஒவ்வொரு ஆண்டும், அங்கன்வாடி மையத்தில் புதிதாக இணைகின்றனர்.
எனவே பழுதடைந்த பழைய கட்டடத்தை அகற்றி, புதிய கட்டடம் வேண்டும் என, பெற்றோர் கோரிக்கை வைத்தனர்.
இதையடுத்து, புதிய அங்கன்வாடி மைய கட்டடம், 2014 - 15ம் ஆண்டு எம்.எல்.ஏ., தொகுதி நிதியில் இருந்து, 6 லட்சத்து, 50 ஆயிரம் ரூபாய் மதிப்பில் புதிதாக கட்டப்பட்டது.
ஆனால் அங்கன்வாடி மையம் பயன்பாட்டுக்கு வராமல் மூடி வைக்கப்பட்டு உள்ளதால், கட்டடம் பழுதடைந்து வந்தது.
அங்கன்வாடி மையம் பயன்பாட்டுக்கு வராததால், பெற்றோர், 1 கி. மீ., துாரமுள்ள மற்றொரு மையத்திற்கு குழந்தைகளை அனுப்பி வருகின்றனர்.
மேலும், புதிதாக கட்டப்பட்ட கட்டடம் பயன்பாடின்றி வீணாகி வந்தது.
இதுகுறித்தான செய்தி நம் நாளிதழில் வெளியானதையடுத்து, ஒன்றிய நிதி வாயிலாக கட்டடம் சீரமைக்கப்பட்டு பயன்பாட்டிற்கு வந்தது.