வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
புதுடில்லி :நம் நாட்டில் 2009 முதல் 2019 வரையிலான 10 ஆண்டுகளில், 71 எம்.பி.,க்களின் சொத்து மதிப்பு சராசரியாக 286 சதவீதம் அதிகரித்துள்ளது ஆய்வில் தெரியவந்துள்ளது.
புதுடில்லியை தலைமையிடமாக வைத்து செயல்படும் ஜனநாயக சீர்திருத்தங்களுக்கான கூட்டமைப்பு, 2009 முதல் 2021 வரையிலான காலத்தில் இருந்த லோக்சபா எம்.பி.,க்களின் சொத்து மதிப்பு குறித்த கணக்கை சமீபத்தில் வெளியிட்டது. இதில் கூறப்பட்டுள்ளதாவது: கடந்த 2009 முதல் 2019 வரையிலான காலகட்டத்தில் இருந்த லோக்சபா எம்.பி.,க்களின் சொத்து மதிப்பு, சமீபத்தில் கணக்கெடுக்கப்பட்டது.
![]()
|
இதில், கர்நாடகாமாநிலம் பீஜாபூர் தொகுதி யைச் சேர்ந்த பா.ஜ. - எம்.பி., ரமேஷ் சந்தப்பாவின் சொத்து மதிப்புபிரமாண்டமாக உயர்ந்துஉள்ளது.கடந்த 2009ல் 1.18 கோடி ரூபாயாக இருந்த இவரின் சொத்து மதிப்பு, 2014ல் 8.94 கோடி ரூபாயாகவும், இது 2019ல் இது 50.41 கோடி ரூபாயாகவும் உயர்ந்துள்ளது.
இது ஒட்டுமொத்த அளவில் 4,189 சதவீதமாகும். கடந்த, 2016 முதல் 2019 வரை மத்திய அரசில் குடிநீர் மற்றும் சுகாதார துறை இணை அமைச்சராக இருந்த ரமேஷ் சந்தப்பா, லோக்சபா தேர்தல்களின்போது, தாக்கல் செய்த பிரமாண பத்திரங்கள் வாயிலாக இந்த விபரம் தெரியவந்துள்ளது.
இரண்டாம் இடத்தை பிடித்துள்ள பெங்களூரு மத்திய தொகுதி பா.ஜ. - எம்.பி.,யான மோகனின் சொத்து மதிப்பு, 2009ல் 5.37 கோடி ரூபாயாக இருந்த நிலையில், இது 10 ஆண்டுகளில் 75.55 கோடி ரூபாயாக அதிகரித்து உள்ளது. மூன்றாம் இடத்தில் உத்தர பிரதேசத்தின் பா.ஜ. - எம்.பி., வருணும், நான்காம் இடத்தில், பஞ்சாபைச் சேர்ந்த சிரோமணி அகாலிதள எம்.பி., ஹர்சிம்ரவுத் கவுர் பாதலும் உள்ளனர்.
இந்தப் பட்டியலில், தேசியவாத காங்கிரஸ் கட்சியின் சுப்ரியா சுலே, பிஜு ஜனதா தளத்தைச் சேர்ந்த பினாகி மிஸ்ரா உள்ளிட்ட எம்.பி.,க்களும் உள்ளனர். சுயேச்சைகள் உட்பட 71 எம்.பி.,க்களின் சராசரி சொத்து மதிப்பு 2009ல் 6.15 கோடி ரூபாயாக இருந்தது. கடந்த 2019 வரையிலான காலக்கட்டத்தில், இவர்கள் சொத்துகளின் சராசரி வளர்ச்சி 286 சதவீதம் அதிகரித்து 17.59 கோடி ரூபாயாக உள்ளது. இவ்வாறு இந்த அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது.