வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
கூடலூர்: கேரளாவில் இருந்து, நீலகிரி மாவட்டம் கூடலூருக்கு, தமிழகத்தில் தடை செய்யப் பட்ட புகையிலை பொருட்கள் கடத்தி வருவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. கூடலூர் எஸ்.ஐ., ராமேஸ்வரன், எஸ்.எஸ்.ஐ., இப்ராஹிம், பயிற்சி எஸ்.ஐ., வெள்ளைத்தங்கம் ஆகியோர் இன்று (ஜன., 4) மாலை கோழிக்கோடு சாலை, கோழிப்பாலம் பகுதியில் வாகன சோதனை மேற்கொண்டனர்.
கோளாவில் இருந்து கூடலூருக்கு, எம்.சாண்ட் ஏற்றி வந்த லாரியை சோதனை செய்தனர். அதில் தமிழகத்தில் தடை செய்யப்பட்ட 100 பண்டல் (1500 பாக்கேட்டுகள்) புகையிலை பொருட்களை, கடத்தி வந்தது தெரிய வந்தது. லாரியுடன் அதனை பறிமுதல் செய்த போலீசார், கேரளா மாநிலம் மம்பாடு பகுதியை சேர்ந்த அஸ்கர், 37, முஜிப்பூர் ரகுமான், 32, ஆகியோரை கைது செய்தனர். பறிமுதல் செய்யப்பட்ட புகையிலை பொருட்களின் மதிப்பு ஒரு லட்சத்து 12 ஆயிரத்து 500 ரூபாய் ஆகும்.