புதுடில்லி:உலக முன்னணி பணக்காரர்களில் ஒருவரும், 'மைக்ரோசாப்ட்' நிறுவனத்தின் இணை நிறுவனருமான பில் கேட்ஸ், இந்திய ரொட்டி தயாரிப்பது குறித்து சமூக வலை
தளத்தில் வெளியிட்ட 'வீடியோ'வை பார்த்து, அவரை வெகுவாக பாராட்டி உள்ளார் பிரதமர் மோடி.
மேலும் சிறுதானியங்களை பயன்படுத்தி, உணவு வகைகளை தயாரிக்கலாம் என்றும் அவரை ஊக்கப்படுத்தி உள்ளார் பிரதமர்.பில்கேட்ஸ் வெளியிட்ட வீடியோவில், அவருக்கு அமெரிக்காவின் பிரபல சமையல் கலை வல்லுனரான எய்டன் பெர்நாத் இந்திய ரொட்டியை தயாரிப்பது எப்படி என்பதை கற்றுக் கொடுக்கிறார்.
![]()
|
கூடவே, பில்கேட்சும் கைகளால் ரொட்டியை தயாரிக்கிறார். பின் இருவரும் தாங்கள் கைகளால் தயாரித்த இந்திய ரொட்டியை, நெய்யுடன் ருசித்து சாப்பிடுகின்றனர்.
சமூக ஊடகங்களில் இந்த வீடியோ வெளியிடப்பட்ட முதல் நாளிலேயே, கிட்டத்தட்ட 1.3 லட்சத்திற்கும் அதிகமான பார்வையாளர்கள்கண்டுகளித்துஉள்ளனர். இந்நிலையில், பில்கேட்சின் இந்த வீடியோ பதிவை பார்த்த பிரதமர் மோடி, 'சூப்பர்' என தெரிவித்து, பாராட்டி உள்ளார்.
மேலும், “இந்தியா வில் தற்போது டிரென்டாக இருப்பது சிறுதானியங்கள் தான். சிறுதானிய உணவு வகைகள் நிறைய உள்ளன. அவற்றையும் தயாரிக்க நீங்கள் முயற்சிக்கலாம்” என்றும் மோடி தெரிவித்துள்ளார். கூடவே ஒரு 'ஸ்மைலிங் எமோஜி'யையும் பதிவிட்டுள்ளார்.