வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
கேப் கேனவெரல்,-'ஜூபிடர்' என்றழைக்கப்படும் வியாழன் கிரகத்தின் சுற்றுவட்டப் பாதையில், மேலும் புதிய ௧௨ நிலவுகள் இருப்பதை, அமெரிக்க வானியல் ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர்.
![]()
|
இதையடுத்து, இந்த கிரகத்தை சுற்றி வரும் மொத்த நிலவுகளின் எண்ணிக்கை ௯௨ ஆக உயர்ந்துள்ளது.
அமெரிக்காவின் வாஷிங்டனில் அமைந்துள்ள கார்னெகி வின்வெளி ஆய்வுக் குழுவைச் சேர்ந்த ஸ்காட் ஷெப்பர்டு என்ற ஆராய்ச்சியாளர், சில ஆண்டுகளுக்கு முன் சனி கிரகத்தை சுற்றியுள்ள நிலவுகளை கண்டறிந்தார்.
வியாழனை சுற்றியுள்ள ௭௦ நிலவுகளை கண்டறிந்த குழுவிலும் இவர் இருந்தார்.
தற்போது இந்த புதிய நிலவுகள் குறித்து அவர் கூறியதாவது:
கடந்த ௨௦௨௧ - ௨௨ல், ஹவாய் மற்றும் சிலி நாட்டில் இருந்து தொலைநோக்கி வாயிலாக தொடர் ஆராய்ச்சியில் ஈடுபட்ட போது, 12 புதிய நிலவுகளின் சுற்றுவட்டப் பாதைகள் உறுதிப்படுத்தப்பட்டன.
இந்த நிலவுகள், 1 கி.மீ., முதல் 3 கி.மீ., பரப்பளவில் உள்ளன.
இதையடுத்து, இந்த புதிய நிலவுகளுடன், வியாழனில் உள்ள நிலவுகளின் எண்ணிக்கை ௯௨ ஆக உயர்ந்துள்ளது.
இது, மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது
.

சூரியக் குடும்பத்தில், வியாழனுக்கு அடுத்தபடியாக சனி கிரகத்தின் சுற்றுவட்டப் பாதையில் ௮௩ நிலவுகள் இருப்பது உறுதிப்படுத்தப்பட்டு உள்ளது.
இந்த வரிசையில், யூரேனசில் ௨௭ நிலவுகள், நெப்டியூனில் ௧௪, செவ்வாய் கிரகத்தில் இரண்டு நிலவுகள் உள்ளன. பூமியில் ஒரு நிலவு உள்ளது. வீனஸ் மற்றும் மெர்க்குரியில் நிலவு இல்லை.
வியாழனில் கண்டறியப்பட்டுள்ள 12 புதிய நிலவுகளுக்கு இன்னும் பெயர் வைக்கப்படவில்லை.
இவ்வாறு அவர் கூறினார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement