வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
/
கயா,-பீஹாரில், 'டாமி' என்ற நாய்க்கு ஜாதி சான்றிதழ் கோரி, 'ஆன்லைனில்' ஆதார் அட்டையுடன் விண்ணப்பம் செய்யப்பட்டு உள்ளது. இதையடுத்து, நாய் பெயரிலான ஆதார் அட்டை சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவிய வருகிறது.
![]()
|
பிறந்த நாள்
பீஹாரில் முதல்வர் நிதிஷ் குமார் தலைமையில் ஐக்கிய ஜனதா தளம், ராஷ்ட்ரீய ஜனதா தளம், காங்கிரஸ் கூட்டணி ஆட்சி நடக்கிறது.
இங்குள்ள குராரு மண்டல அலுவலகத்துக்கு, டாமி என்ற நாய்க்கு, ஜாதி சான்றிதழ் கோரி ஆன்லைனில் விண்ணப்பிக்கப்பட்டுஇருந்தது. விண்ணப்பத்துடன் நாய் பெயரிலான ஆதார் அட்டையின் நகலும் இணைக்கப்பட்டிருந்தது.
இதைப் பார்த்த அரசு அதிகாரிகள் திகைத்துப் போயினர்.
ஆதார் அட்டையில், டாமியின் பிறந்த நாள் ௨௦௨௨, ஏப்ரல் ௧௪; டாமியின் தந்தை பெயர்----- -----------ஷெரு; தாய் பெயர் ஜின்னி; முகவரியில், பாண்டேபோகார் கிராமம், ரவுனா ஊராட்சி, வார்டு எண் ௧௩, குராரு வட்டம் என குறிப்பிடப்பட்டிருந்தது.
பொதுமக்களுக்கு வழங்கப்பட்டுள்ள ஆதார் அட்டையில், 'ஆதார் - சாதாரண மனிதனின் அதிகாரம்' என்று இருக்கும். இந்த டாமிக்கான ஆதார் அட்டையில், 'ஆதார் - சாதாரண நாயின் அதிகாரம்' என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
![]()
|
ஆதார் அட்டை
இந்த விண்ணப்பதை நிராகரித்த குராரு மண்டல அதிகாரி சஞ்சீவ் குமார் திரிவேதி, இதுகுறித்து போலீசாரிடம் புகார் அளித்துள்ளார். இதன் அடிப்படையில், இந்த குசும்பை செய்த நபரை போலீசார் தேடி வருகின்றனர்.
இதற்கிடையே, டாமியின் புகைப்படத்துடன் கூடிய ஆதார் அட்டை, தற்போது சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவி வருகிறது.
Advertisement