வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
புதுடில்லி-திரிணமுல் காங்கிரஸ் நிர்வாகி மீதான பணப் பரிமாற்ற மோசடி வழக்கில், காங்கிரஸ் எம்.பி., ராகுலின் நண்பரான அலங்கார் சவாயிடம், அமலாக்கத் துறை அதிகாரிகள் புதுடில்லியில் கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தினர்.
![]()
|
மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, திரிணமுல் காங்கிரஸ் கட்சியின் நிறுவனத் தலைவராக உள்ளார்.
இக்கட்சியின் செய்தித் தொடர்பாளரான குஜராத்தைச் சேர்ந்த சாகேத் கோகலே, ௩௫, பல்வேறு உறுதிமொழிகளை அளித்து, இணையதளம் வாயிலாக நிதி திரட்டி, மோசடியில் ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது.
இதையடுத்து பணப் பரிமாற்ற மோசடி வழக்கில், அமலாக்கத் துறை அதிகாரிகள் கோகலேவை கடந்த மாதம் 25ல் கைது செய்தனர்.
கோகலேவின் வங்கிக் கணக்கில், ௨௩.௫௪ லட்சம் ரூபாய் 'டிபாசிட்' செய்யப்பட்டுள்ளது குறித்து, அவரிடம் விசாரணை நடத்தப்பட்டது.
இதற்கு அவர், சமூக வலைதளப் பணிக்காகவும், பிற ஆலோசனைகளுக்காகவும், காங்கிரசைச் சேர்ந்த அலங்கார் சவாய் தனக்கு பணம் தந்ததாக தெரிவித்துள்ளார்.
![]()
|
முன்னாள் வங்கியாளரான அலங்கார் சவாய், ராகுலின் நெருங்கிய கூட்டாளி.
இவர், காங்கிரசின் ஆய்வுக் குழு தலைவராக உள்ளதாகக் கூறப்படுகிறது.
இவரிடம், அமலாக்கத் துறை அதிகாரிகள் நடத்திய விசாரணையில், கோகலேவிடம் எந்த பணப் பரிமாற்றமும் செய்யவில்லை என தெரிவித்துள்ளார்.
இந்த வழக்கில் பலருக்கும் தொடர்பு இருப்பதால், அவர்களிடமும் அமலாக்கத் துறை விசாரணை நடத்தும் எனக் கூறப்படுகிறது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement