வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
/
சாண்டியாகோ-சிலி நாட்டில் 150க்கும் மேற்பட்ட வனப்பகுதிகளில் பற்றி எரியும் காட்டுத் தீயில் சிக்கி, 13 பேர் பலியாகியுள்ளனர்.
![]()
|
தென் அமெரிக்க நாடான சிலியில், கடந்த சில நாட்களாக கடும் வெப்பம் நிலவி வருகிறது.
கடந்த 100 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு வெப்பம் தகிப்பதால், பல இடங்களில் அனல் காற்று வீசுகிறது.
இதனால், நாடு முழுதும் 150க்கும் மேற்பட்ட வனப்பகுதிகளில் காட்டுத் தீ ஏற்பட்டுள்ளது. இங்கு, 34 ஆயிரத்து 600 ஏக்கர் பரப்பளவில் தீ பரவி வரும் நிலையில், இதைக் கட்டுப்படுத்த விமானம் வாயிலாக ரசாயனம் தெளிப்பது உட்பட பல்வேறு முயற்சிகளை சிலி அரசு எடுத்து வருகிறது.
![]()
|
இந்நிலையில், காட்டுத் தீயில் சிக்கி, நேற்று வரை 13 பேர் உயிரிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுஉள்ளது.
இவர்களில், பொதுமக்கள், தீயணைப்பு படை வீரர்கள், மீட்புப் பணியாளர்கள் இருக்கும் நிலையில், வேகமாகப் பரவும் தீயால் உயிரிழப்பு அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது.
தீயில் சிக்கி அரிய வகை மரங்கள், செடிகள் கருகி வருகின்றன. காட்டுத் தீ பரவும் பகுதி யில் வசிக்கும் ஆயிரக்கணக்கானோர், பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
பல இடங்கள் புகை மண்டலமாக மாறியுள்ளதால், சுற்றுச்சூழல் பாதிக்கும் அபாயமும் ஏற்பட்டுள்ளது.
Advertisement