வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
/
புதுடில்லி: தொழிலதிபர் கவுதம் அதானி குழுமம் குறித்து, அமெரிக்காவைச் சேர்ந்த முதலீட்டு ஆய்வு நிறுவனம் 'ஹிண்டன்பர்க்' அளித்த அறிக்கை பெரும் பிரச்னையை ஏற்படுத்தியதோடு, பங்குச்சந்தையில் அக்குழுமத்திற்கு பெரும் நஷ்டத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
![]()
|
இந்நிலையில், 'பிரதமர் மோடிக்கு நெருக்கமான அதானி, எல்.ஐ.சி., மற்றும் இந்திய பொதுத்துறை வங்கிகளின் பணத்தை கையாண்டுள்ளார்' எனக் குற்றஞ்சாட்டும் எதிர்க்கட்சிகள், பார்லிமென்டின் பட்ஜெட் கூட்டத்தொடரையும் முடக்கி வருகின்றன. இன்னொரு பக்கம் உச்ச நீதிமன்றத்திலும் இது தொடர்பாக விசாரணை வேண்டும் என வழக்கு தொடரப்பட்டுள்ளது.
இந்த பிரச்னையை பெரிதாக்கி, வரும் 2024 லோக்சபா தேர்தலில் பா.ஜ.,வை தோற்கடிக்க எதிர்க்கட்சிகள் முயற்சி செய்து வருகின்றன. ஆனால், காங்கிரசின் ராஜிவ் பிரதமராக இருந்த போது தான் அதானி குழுமத்திற்கு முக்கிய திட்டங்கள் கிடைத்தன.
![]()
|
பின், நரசிம்ம ராவ், மன்மோகன் சிங் பிரதமர்களாக இருந்த போதும், குஜராத்தில் காங்., முதல்வராக சிமன்பாய் படேல் இருந்த போதும் அதானி குழுமத்திற்கு பல திட்டங்கள் கிடைத்துள்ளன. கேரள முதல்வர் பினராயி விஜயன் உட்பட இன்னும் பலர் இக்குழுமத்திற்கு பல திட்டங்களை வழங்கியுள்ளனர் என்கின்றனர் விஷயம் தெரிந்தவர்கள்.
அதானி விவகாரத்தில் தங்களுக்கு எந்த பாதிப்பும் இல்லை என, எல்.ஐ.சி., மற்றும் பாரத ஸ்டேட் வங்கி தெரிவித்துள்ளன. எனவே, இந்த விவகாரத்தில் மோடிக்கு எந்த பாதிப்பும் வராது. 'காங்., ஆட்சியில் 2 கோடி ரூபாய் மூலதனத்தில் துவங்கப்பட்ட அதானி குழுமம், மன்மோகன் சிங் ஆட்சியில் 80 ஆயிரம் கோடி நிறுவனமாக உயர்ந்தது; பா.ஜ.,வை எதிர்க்க ஏதாவது ஒரு விஷயம் தேவை; இப்போதைக்கு அதானி விஷயம்' என்கிறார் ஒரு அரசியல் ஆய்வாளர்.
Advertisement