வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
உலக, நாடு, தமிழக நடப்புகள் குறித்து வாசகர்கள் தினமலர் நாளிதழிற்கு எழுதிய கடிதம்...
எஸ்.ராமசுப்பிரமணியன், சென்னையிலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்:
ஒருவர் ஒரே நேரத்தில், இரண்டு தொகுதிகளில் போட்டியிடுவதற்கு தடை கோரியவழக்கை, உச்ச நீதிமன்றம் தள்ளுபடிசெய்துள்ளது. இது தொடர்பாக, 'பார்லிமென்டே முடிவு செய்ய வேண்டும்' என்றும் தெரிவித்துள்ளது.
'ஒன்றுக்கும் மேற்பட்ட தொகுதிகளில்போட்டியிட வாய்ப்பளிப்பதன் வாயிலாக, அரசியல் ஜனநாயகம் மேலும் வலுப்படுவதாக பார்லிமென்ட் கருதலாம். ஒருவர் இரண்டு தொகுதிகளில் போட்டியிடும் போது, எந்த தொகுதியில் வெற்றி வாய்ப்பு கிடைக்கும் என்பது தெரியாது. அதனால், இதில் தவறு இருப்பதாக தெரியவில்லை. இது, நம் ஜனநாயகத்தின் ஒரு பகுதியாகும்.
'இருப்பினும், ஒருவரை ஒரே நேரத்தில்,ஒரு தொகுதியில் மட்டுமே போட்டியிட அனுமதிப்பது தொடர்பாக, பார்லிமென்டே முடிவு செய்ய முடியும். இதில், நீதிமன்றம் தலையிட முடியாது' என, உச்ச நீதிமன்ற அமர்வு உத்தரவிட்டுள்ளது.
![]()
|
இந்த வழக்கில், மனுதாரர் சுட்டிக் காட்டியிருந்த முக்கிய அம்சமே, 'ஒருவர் இரண்டு தொகுதிகளில் போட்டியிட்டு, இரண்டிலும் வென்றால், ஒரு தொகுதியின் பதவியை ராஜினாமா செய்ய வேண்டியுள்ளது. இதனால், அங்கு மீண்டும் இடைத்தேர்தல் நடத்த வேண்டியுள்ளது.
இது, தேர்தல் கமிஷனுக்கு கூடுதல் வேலைப் பளுவை ஏற்படுத்துவதுடன், மக்கள் வரிப்பணம் வீணடிக்கப்படுகிறது' என்பது தான்.
இப்படி மக்கள் வரிப்பணம் வீணடிக்கப்படுவதைப் பற்றி, உச்ச நீதிமன்றம் கவலைப்படவில்லை. அதேநேரத்தில்,ஜனநாயக உரிமை என்ற வார்த்தையின்அடிப்படையிலேயே, ஒருவர் இருவர்தொகுதிகளில் போட்டியிடும் விவகாரத்தைசுலபமாக முடித்து வைத்திருக்கலாம்; அதைச் செய்ய நீதிபதிகள் தவறி விட்டனர்...
![]()
|
அதாவது, 'ஒரு அரசியல்வாதியை இரண்டு தொகுதிகளில் போட்டியிட அனுமதிக்கலாம். அப்படி போட்டியிட்டு, இரண்டிலும் வெற்றி பெற்று விட்டால், ஒரு தொகுதி பதவியை ராஜினாமா செய்ய வேண்டும். அப்படி ராஜினாமா செய்யும்தொகுதியில், அடுத்து நடைபெறும் இடைத் தேர்தலுக்கான செலவு முழுவதையும்,அந்த அரசியல்வாதியே ஏற்க வேண்டும்' என, நிபந்தனை விதித்து, அதற்கான உறுதிமொழி பத்திரத்தை, வேட்புமனு தாக்கலின்போது, கையெழுத்திட்டு கொடுக்க வேண்டும் என்று தெரிவித்திருக்கலாம்.
இப்படி ஒரு உத்தரவை உச்ச நீதிமன்றம்பிறப்பித்திருந்தால், இரண்டு தொகுதிகளில் போட்டியிடுவது குறித்து, எந்த அரசியல்வாதியும் கற்பனை செய்து கூட பார்க்க மாட்டார்கள். அதற்கு பதிலாக, 'ஒருவர் இருதொகுதிகளில் போட்டியிடுவதை தடை செய்ய முடியாது' என, உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளதை, 'ஜனநாயக கேலிக்கூத்து' என்றே சொல்ல வேண்டும்.