வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
புதுடில்லி: புதிய பார்லிமென்ட் கட்டடத்தில் அனைத்து மாநில முன்னாள் முதல்வர்களின் புகைப்படங்களை வைக்க ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன. இதையடுத்து, முன்னாள் முதல்வர்களின் படங்களை அனுப்ப, சம்பந்தப்பட்ட மாநில அரசுகளுக்கு வேண்டுகோள் வைக்கப்பட்டுள்ளது.
![]()
|
தமிழகத்தைப் பொறுத்தவரை முன்னாள் முதல்வர்கள் ராஜாஜி, பக்தவத்சலம், ஓமந்துாரார், காமராஜர், அண்ணாதுரை, கருணாநிதி, எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா ஆகியோரது புகைப்படங்கள் வைக்கப்பட உள்ளன.
![]()
|
இவர்களுடைய புகைப்படங்களை அனுப்பி வையுங்கள் என தமிழக அரசுக்கு, மத்திய அரசு சார்பில் கடிதம் எழுதப்பட்டுள்ளது. இந்த ஆண்டு இறுதியிலோ அல்லது அடுத்த ஆண்டு துவக்கத்திலோ புதிய பார்லிமென்ட் கட்டடம் திறந்ததும், இங்கு இவர்களுடைய புகைப்படங்களை பார்க்கலாம்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement