சென்னை,-தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை, ஏப்., 14ல் திருச்செந்துாரில் இருந்து பாதயாத்திரை துவங்குகிறார். இதற்காக எட்டு பேர் குழு அமைக்கப்பட்டு உள்ளது.
தி.மு.க., அரசுக்கு எதிராக, அண்ணாமலை தமிழகம் முழுதும் பாதயாத்திரை மேற்கொள்ள உள்ளார். அப்போது, தி.மு.க., அரசின் அமைச்சர்களின் ஊழல் பட்டியலை வெளியிட போவதாக தெரிவித்துள்ளார்.
மாவட்ட வாரியாக ஆய்வு செய்து, தலைமைக்கு அறிக்கை தர, ஏ.பி.முருகானந்தம் தலைமையில், எட்டு பேர் அடங்கிய குழுவை, அமைப்பு பொதுச்செயலர் கேசவவிநாயகன் நியமித்துஉள்ளார்.