வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
புதுடில்லி: மத்திய அரசின், 'சென்ட்ரல் விஸ்டா' திட்டத்தின் கீழ், புதிய பார்லிமென்ட் கட்டடம், பிரதமர் மற்றும் துணை ஜனாதிபதி இல்லம், ஜனாதிபதி மாளிகை முதல் இந்தியா கேட் வரையிலான கர்த்தவ்ய பாதை புதுப்பிப்பு உள்ளிட்ட பணிகள் நடந்து வருகின்றன.
![]()
|
ஜனாதிபதி மாளிகைக்கு பின்னால் பிரதமரின் புதிய இல்லம், அவரது அலுவலகம், துணை ஜனாதிபதியின் இல்லம் என அனைத்தும் தயாராகி வருகின்றன.
தற்போது பிரதமர் மோடியின் இல்லம் டில்லியின் லோக் கல்யாண் சாலையில் உள்ளது. பிரதமரின் புதிய இல்லம் தயாராகிவிட்ட நிலையில், முன்னாள் பிரதமர் வாஜ்பாய் பிறந்த தினமான டிசம்பர் 25ம் தேதி, இதில் குடியேற இருக்கிறாராம் மோடி.
![]()
|
பிரதமரின் புதிய இல்லத்தில், பல நவீன வசதிகளுடன் பாதுகாப்பு வசதிகளும் செய்யப்பட்டுள்ளதாம். பிரதமரின் பாதுகாப்பை கவனிக்கும் எஸ்.பி.ஜி., அமைப்பின் கருத்துகளை கேட்ட பிறகே, இந்த பாதுகாப்பு வசதிகள் மேம்படுத்தப்பட்டுள்ளதாம்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement