வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
ஈரோடு,-ஈரோடு கிழக்கு தொகுதி அ.தி.மு.க., பன்னீர் அணி வேட்பாளர், வேட்பு மனுவை வாபஸ் பெற முடிவு செய்துள்ளார்.
![]()
|
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில், அ.தி.மு.க., பழனிசாமி அணி வேட்பாளராக தென்னரசு, பன்னீர் அணி வேட்பாளராக செந்தில் முருகன் அறிவிக்கப்பட்டனர்.
இருவரும் கடந்த, 3ல் வேட்பு மனு தாக்கல் செய்ய அனுமதி பெற்றனர்.
இதற்கிடையில், பழனிசாமி உத்தரவுப்படி, வேட்பாளர் தென்னரசு, அன்று மனு தாக்கல் செய்யாமல் வரும், 7ல் மனு தாக்கல் செய்வதாக அறிவித்தார்.
![]()
|
பன்னீர் அணி வேட்பாளர் செந்தில் முருகன், 3ல் வேட்புமனு தாக்கல் செய்தார்.
மனுவில் கட்சி என்ற பகுதியில் அ.இ.அ.தி.மு.க., என்றும், சின்னம் என்ற இடத்தில் நிரப்பாமல் தாக்கல் செய்திருந்தார்.
இந்நிலையில், உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி பொது வேட்பாளராக, அ.தி.மு.க., சார்பில் நிறுத்தப்பட உள்ளதால், செந்தில்முருகனை வாபஸ் பெறும்படி பன்னீர்செல்வம் வலியுறுத்தி உள்ளார்.
இதனால், 7 அல்லது, 8ம் தேதி அவர் மனுவை வாபஸ் பெறவுள்ளார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement