வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
புதுடில்லி: தற்போது பார்லி.,யில் பட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெற்று வரும் நிலையில், தி.மு.க.,வின் சில சீனியர் எம்.பி.,க் கள் தங்கள் உறவினர்களையும், நண்பர்களையும் புதுடில்லிக்கு அழைத்து வந்துள்ளனர். இவர்களுக்கு புதுடில்லி மற்றும் பக்கத்து மாநிலங்களை சுற்றிக் காட்டி வருகின்றனர்.
![]()
|
இந்த எம்.பி.,க்களின் பங்களாக்கள் படு 'பிசி'யாக உள்ளன. இவர்கள் ஏற்கனவே பல முறை எம்.பி., யாக தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள். 'வரும் 2024 லோக்சபா தேர்தலில் போட்டியிட எங்களுக்கு மீண்டும் சீட் கிடைக்காது; அப்படியே கிடைத்தாலும் வெற்றி பெறுவது கடினம்' என இவர்கள் சொல்லி வருகின்றனர்.
![]() |
எனவே, எம்.பி.,யாக இருக்கும்போதே தங்களுக்கு நெருக்கமானவர்களை புதுடில்லிக்கு அழைத்து வந்து சுற்றிக் காட்ட வேண்டும் என்கின்றனர் இவர்கள்.
இந்த எம்.பி.,க்கள் தங்களுடைய உடைமைகளையும் சொந்த ஊருக்கு அனுப்ப தயாராகிவிட்டனர். எம்.பி.,யாக இருக்கும் போது சாமான்களை ரயில் வாயிலாக அனுப்பினால் இலவசம். முன்னாள் எம்.பி., என்றால் பணம் கட்ட வேண்டியிருக்கும் என்பதால் இந்த ஏற்பாடாம்.