சென்னை,-'இன்று முதல் மூன்று நாட்களுக்கு வறண்ட வானிலை நிலவும்' என, சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
ஆய்வு மைய இயக்குனர் செந்தாமரை கண்ணன் அறிவிப்பு:
தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில், இன்று முதல் 7ம் தேதி வரை, வறண்ட வானிலை நிலவக்கூடும். வரும் 8ம் தேதி தமிழகம், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில், ஓரிரு இடங்களில் லேசான அல்லது மிதமான மழை பெய்யக்கூடும்.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில், அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக, நாகப்பட்டினம் மாவட்டம் வேளாங்கண்ணியில், 10 செ.மீ., மழை பதிவானது.
அதற்கு அடுத்தபடியாக, மயிலாடுதுறை மாவட்டம் செம்பனார்கோவில் பகுதியில் 7; நாகப்பட்டினம் மாவட்டம் திருப்பூண்டி, புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி, திருநெல்வேலி மாவட்டம் ஊத்துமலை பகுதியில் தலா 6 செ.மீ., மழை பதிவானது.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.