திண்டுக்கல் : திண்டுக்கல் நாடார் உறவின்முறை எஸ்.எம்.பி., மாணிக்கம் பாக்கியத்தம்மாள் நேஷனல் பப்ளிக் பள்ளியில் ராஜபாளையம் சர்வதேச வானொலி சங்கத்தினர் வழிகாட்டுதலின் படி, ஹேம் ரேடியோ எனப்படும் அமெச்சூர் வயர்லெஸ் லைசென்ஸ்க்கான மத்திய அரசுத்தேர்வு நடந்தது.
இதற்கான பயிற்சி வகுப்புகள் பள்ளியில் செப். முதல் நடைபெற்றது. இத்தேர்வில் 8, 9ம் வகுப்பு மாணவர்கள் பங்கேற்றனர். பங்கேற்றவர்களில் 41 மாணவர்கள் தேர்வு பெற்றனர்.
வெற்றி பெற்ற மாணவர்களை பள்ளி தாளாளர் ராமதாஸ் பாராட்டினர். பள்ளி தாளாளர் கூறுகையில்,''தகவல்தொடர்பு சாதனங்கள் இயங்காவிட்டாலும் ஹேம் ரேடியோ மூலம் பிறரை தொடர்பு கொள்ள இயலும்.பள்ளியில் ஹேம் கிளப், ஹேம் ஸ்டேசன் துவங்க உள்ளதாக,'' தெரிவித்தார்.