தமிழகத்தில் 3 லட்சம் பேருக்கு திறன் மேம்பாட்டு பயிற்சி: மத்திய அமைச்சர் பேச்சு

Updated : பிப் 05, 2023 | Added : பிப் 05, 2023 | கருத்துகள் (8) | |
Advertisement
கோவை: ''தமிழகத்தில் 3 லட்சம் இளைஞர்களுக்கு திறன் மேம்பாட்டு பயிற்சி தரப்படும்; முன்மாதிரி திட்டத்தை செயல்படுத்த கோவையில் சிறப்பு மையம் அமைக்கப்படும்,'' என, மத்திய இணை அமைச்சர் ராஜிவ் சந்திரசேகர் தெரிவித்தார். கோவை 'கொடிசியா' தொழிற்காட்சி வளாகத்தில் திறன்மேம்பாட்டு திட்டம் குறித்து கோவை தொழில் அமைப்பினருடன் மத்திய எலக்ட்ரானிக்ஸ், தகவல் தொழில்நுட்பம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone

கோவை: ''தமிழகத்தில் 3 லட்சம் இளைஞர்களுக்கு திறன் மேம்பாட்டு பயிற்சி தரப்படும்; முன்மாதிரி திட்டத்தை செயல்படுத்த கோவையில் சிறப்பு மையம் அமைக்கப்படும்,'' என, மத்திய இணை அமைச்சர் ராஜிவ் சந்திரசேகர் தெரிவித்தார்.



latest tamil news


கோவை 'கொடிசியா' தொழிற்காட்சி வளாகத்தில் திறன்மேம்பாட்டு திட்டம் குறித்து கோவை தொழில் அமைப்பினருடன் மத்திய எலக்ட்ரானிக்ஸ், தகவல் தொழில்நுட்பம் மற்றும் திறன்மேம்பாட்டு திட்ட இணை அமைச்சர் ராஜிவ் சந்திரசேகர் ஆலோசனை நடத்தினார்.

கூட்டத்தில் அமைச்சர் ராஜிவ் சந்திரசேகர் பேசியதாவது:
கடந்த ஆட்சியில் வெளியிடப்பட்ட ஆய்வில், மத்திய அரசு திட்டத்தின் பலன்கள் 15 சதவீதம் மட்டுமே மக்களை சென்றடைந்தது. தற்போது 100 சதவீதமும் நேரடியாக மக்களுக்கு சென்றடைகிறது. இறக்குமதி செய்யப்பட்டு வந்த மொபைல்போன்கள், தற்போது ஏற்றுமதியாகின்றன. 8 ஆயிரம் ஸ்டார்ட் அப் தொழில்கள் உருவாகியுள்ளன.

தமிழகத்தில் 3லட்சம் பேருக்கு திறன்மேம்பாட்டு பயிற்சி அளிக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதன் முன்மாதிரி திட்டமாக கோவையில் ஒரு சிறப்பு திறன்மேம்பாட்டு பயிற்சி மையம் அமைக்கப்படும். இதற்கான வடிவமைப்பை உருவாக்க கோவையில் அடுத்த வாரம் அதிகாரிகள் ஆலோசனை கூட்டம் நடக்கவுள்ளது.


latest tamil news


மார்ச் மாதத்தில் இந்த மையத்தை செயல்படுத்த மத்திய அரசு முயற்சி செய்யும். பள்ளி, கல்லுாரிகளில் படிக்கும் மாணவர்கள் மட்டுமின்றி, தொழில்துறையில் பணியாற்றுவோருக்கும் இந்த பயிற்சி திட்டத்தை அரசு செயல்படுத்தும். தொழில் அமைப்புகள், தொழில்துறையினர் திட்டத்தில் பங்கேற்கலாம். இவ்வாறு அவர் பேசினார்.

நிகழ்ச்சியில், கொடிசியா தலைவர் திருஞானம் வரவேற்றார். கோவை தெற்கு தொகுதி எம்.எல்.ஏ.,வானதி, கோவை தொழில்வர்த்தக சபை தலைவர் ஸ்ரீராமுலு, தென்னிந்திய இன்ஜினியரிங் உற்பத்தியாளர் சங்கத்தின் (சீமா) தலைவர் விக்னேஷ், கோவை மாவட்ட கிரில் தயாரிப்பாளர் சங்க தலைவர் திருமலைக்குமார் உள்ளிட்டோர் பேசினர்.
'கொடிசியா' கவுரவ செயலாளர் சசிக்குமார் நன்றி தெரிவித்தார்.


வியக்க வைத்த அமைச்சர்


மதிய உணவின்போது அமைச்சர் ராஜிவ் சந்திரசேகர் தொழில்துறையினருடன் அமர்ந்து உணவு அருந்தினார். கூட்டம் துவங்கும் நேரத்திற்கு முன்பே வந்த அவர், தொழில்துறையினருடன் மத்திய பட்ஜெட் குறித்த கருத்துக்களை கேட்டு குறிப்பெடுத்துக் கொண்டார். அமைச்சருக்கான பந்தா இல்லாமல், சாதாரணமாக எல்லோரையும் சந்தித்தார். அதோடு, மேடையில் அரசின் சாதனைகளை தெளிவாக எடுத்துச்சொன்னார்.

தொழில்துறையினரின் கருத்துக்களை அவரே குறிப்பெடுத்துக் கொண்டதுடன், கேள்விகளுக்கும் உடனே பதில் அளித்தார். தமிழக அமைச்சர்களின் பந்தாவும், மத்திய அமைச்சரின் பணிவும் தொழில்துறையினரை திகைக்க வைத்தது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து (8)

krishna -  ( Posted via: Dinamalar Android App )
05-பிப்-202314:59:52 IST Report Abuse
krishna NEENGA VERA SIR.ENGA DRAVIDA MODEL AATCHIYIL TASMAC KUDIPPADHILUM KANJA UBAYOGATHILUM INGU ULLA ILANJARGALAI ERKENAVE IPPODHUM KATTUMARAM KUDUMBAM SEIDHU SAADHANAI PADAITHU VITTADHU. NANNGA TASMAC DUMILANS .ENGALUKKU NERMAI DESA BAKTHI ULLA ONDRIYA ARASAI PIDIKKADHU.KOTHADIMAI OOPIS KUMBALUKKU BUDHI IRUNDHAAL ADHISAYAM.ADHISAYAMOO ADHISAYAM.
Rate this:
Cancel
g.s,rajan - chennai ,இந்தியா
05-பிப்-202314:52:10 IST Report Abuse
g.s,rajan படித்து முடித்து என்ன பிரயோஜனம் ,மேலும் இளைஞர்களுக்கு உலக அளவில் வேலை வாய்ப்பு இல்லாததால் வழிப்பறி ,கொள்ளை ,திருட்டு போன்றவற்றில் திறனை மேம்படுத்த பயிற்சி கொடுப்பார்களா... ???இருக்கலாம் .
Rate this:
Cancel
05-பிப்-202312:41:22 IST Report Abuse
அப்புசாமி 100 சதவீதம்.பயுற்சி அளிக்கப்பட்டு 140/கோடி பேருக்கும் வகை வாய்ப்பு குடுத்தாச்சு. இனிமே பொறக்கப் போற குழந்தைகளுக்குத்தான் வேலை குடுக்கணும். ஜெய் ஹிந்த்.
Rate this:
05-பிப்-202315:02:19 IST Report Abuse
krishna OOPIS KUMBALUKKU BUDHI IRUNDHAAL ADHISAYAM.ADHISAYAMOO ADHISAYAM....
Rate this:
hari - ,
05-பிப்-202316:14:10 IST Report Abuse
hariமின்சார வரியம் 2600 கோடி கடன் இருக்காம்...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X