வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
சென்னை: கூடங்குளம் அணு மின் நிலையத்தில் இருந்து மின்சாரம் வாங்கியதற்காக இந்திய அணு மின் கழகத்திற்கு 2509 கோடி ரூபாயை தமிழக மின் வாரியம் நிலுவை வைத்துள்ளது.
திருநெல்வேலி மாவட்டம் கூடங்குளத்தில் அணு மின் நிலையம் உள்ளது. அங்கு தலா 1000 மெகா வாட் திறனில் இரு அணு உலைகளில் மின் உற்பத்தி செய்யப்படுகிறது.
![]()
|
அதிலிருந்து தமிழகத்திற்கு தினமும் 1152 மெகா வாட் மின்சாரம் ஒதுக்கப்பட்டுள்ளது. மீதி மின்சாரம் மற்ற மாநிலங்களுக்கு வழங்கப்படுகிறது. கூடங்குளத்தில் இருந்து நிலையாக மின்சாரம் கிடைக்கிறது.
இது தமிழக மின் தேவையை பூர்த்தி செய்வதில் மிக முக்கிய பங்கு வகிக்கிறது.
2022 ஜன. நிலவரப்படி கூடங்குளத்தில் இருந்து மின்சாரம் வாங்கியதற்காக 2509 கோடி ரூபாயை மின் வாரியம் நிலுவை வைத்துள்ளது. அதை விரைந்து வழங்குமாறு வாரியத்தை அணு மின் கழகம் வலியுறுத்தி உள்ளது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement