வாஷிங்டன்: அமெரிக்காவில் சந்தேகத்திற்கிடமாக பறந்த சீன உளவு பலூனை அமெரிக்கா விமானப் படை இன்று(பிப்.,05) சுட்டு வீழ்த்தியது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ள சீனா, இதற்கு பின்விளைவுகளை சந்திக்க வேண்டியிருக்கும் என எச்சரித்துள்ளது.
அமெரிக்காவின் மொண்டானா பகுதியில், அந்நாட்டு ராணுவத்தின் கட்டுப்பாட்டில் அணுமின் நிலையம் இயங்கி வருகிறது. பயங்கர கட்டுப்பாடு நிறைந்த இந்த பகுதியின் வான்வெளியில் கடந்த சில தினங்களுக்கு முன், ராட்சத மர்ம பலுான் பறந்தது. இதையடுத்து சீனா பலூன், உளவு பார்க்க அனுப்பட்டுள்ளது என அமெரிக்கா தரப்பில் கூறப்பட்டது.
மேலும் பலூன் சுட்டு வீழ்த்தினால் மக்களுக்கு பாதிப்பு ஏற்படுமா என்ற அச்சம் அமெரிக்காவில் எழுந்தது. இந்நிலையில், லத்தீன் அமெரிக்கா பகுதியில், சீனாவின் மற்றொரு ராட்சத உளவு பலுான் நேற்று(பிப்.,04) தென்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
இந்நிலையில் சந்தேகத்திற்கிடமாக பறந்த சீன உளவு பலூனை அமெரிக்கா விமானப் படை இன்று(பிப்.,05) சுட்டு வீழ்த்தியது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 3 விமான நிலையங்கள் மூடப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
Advertisement