வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
/
சென்னை: நெல் கொள்முதல் விதிமுறைகளில் தேவையான தளர்வுகளை வழங்க வலியுறுத்தி பிரதமருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.
ஸ்டாலின் எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது: பருவம் தவறிப் பெய்த மழையால் காவிரி டெல்டாவில் சம்பா பயிர்கள் நீரில் மூழ்கியுள்ளன. 22% வரை ஈரப்பதமுள்ள நெல்லை கொள்முதல் செய்ய அனுமதிக்க வேண்டும்.

முதிர்ச்சியடையாத சுருங்கிய நெல்லின் குறைந்தபட்ச வரம்பை 3%ல் இருந்து 5% வரை தளர்த்த வேண்டும்.சேதமடைந்த, நிறமாற்றம் மற்றும் முளைத்த நெல்லை 5% லிருந்து 7% வரை தளர்த்த உரிய உத்தரவுகளை பிறபிக்க வேண்டும். தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, புதுக்கோட்டையில் சுமார் 1 லட்சம் ஹெக்டேர் பயிர்கள் சேதமடைந்துள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Advertisement