வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
/
சென்னை: பிரபல பின்னணி பாடகி வாணி ஜெயராம் உடல் பெசன்ட் நகர் மின் மயானத்தில் 30 குண்டுகள் முழங்க போலீஸ் மரியாதையுடன் தகனம் செய்யப்பட்டது.

பிரபல பின்னணி பாடகி சென்னை நுங்கம்பாக்கம் ஹாடோஸ் சாலையில் அடுக்குமாடி குடியிருப்பில் அடுக்குமாடி குடியிருப்பில் தனியாக வசித்து வந்தார். இவரது கணவர் ஜெயராம், 2018 ல் மறைந்துவிட்டார். இவர்களுக்கு குழந்தை இல்லை. வீட்டில் தனியாக இருந்த வாணி ஜெயராம் நேற்று(பிப்.,4) காலமானார். அவரது உடல் அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு, மாலை வீட்டுக்கு கொண்டு வரப்பட்டது.

அவரது உடலுக்கு கவர்னர் ரவி, முதல்வர் ஸ்டாலின், தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை , அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் மற்றும் சினிமா நட்சத்திரங்கள் அஞ்சலி செலுத்தினர். பிறகு, அவரது வீட்டருகே, வாணி உடலுக்கு போலீசார் மரியாதை அளித்தனர்.
பிறகு பெசன்ட் நகர் மின் மயானத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. அங்கு 30 குண்டுகள் முழங்க வாணி ஜெயராம் உடல் மின் மயானத்தில் தகனம் செய்யப்பட்டது.
Advertisement