சென்னை: எதிர்கட்சி தலைவர் பழனிசாமி வெளியிட்ட அறிக்கை: திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடியில் ஒரு தனியார் இலவச சேலை வழங்கும் நிகழ்ச்சியில், ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கிய வயது முதிர்ந்த 4 மகளிர் தங்கள் இன்னுயிரை இழந்துள்ளனர் என்ற செய்தி அறிந்து மிகுந்த மனவேதனை அடைந்தேன்.
மரணமடைந்தவர்களின் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக்கொள்வதுடன், மரணமடைந்தவர்களின் ஆன்மா சாந்தி அடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திக்கிறேன்.
காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைவதற்குத் தேவையான அனைத்து மருத்துவ உதவிகளையும் இந்த அரசு செய்து தர வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்.
இந்த ஆண்டு தைப்பொங்கல் திருநாளுக்கு அரசின் விலையில்லா வேட்டி, சேலையினை வழங்கி இருந்தால், இந்த தனியார் வழங்கும் இலவச சேலையினை வாங்க ஒரே சமயத்தில் சுமார் 1500 ஏழை மகளிர் குழுமியிருக்க மாட்டார்கள். கூட்ட நெரிசல் காரணமாக அப்பாவி ஏழை மகளிர் தங்கள் இன்னுயிரை இழந்திருக்கவும் மாட்டார்கள். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Advertisement