வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
/
புதுடில்லி: பணப்பற்றாக்குறைவால் இளைஞர்கள் பின் தங்கி விடக்கூடாது என்பதில் அரசு தனிக்கவனம் செலுத்தி வருகிறது என பிரதமர் மோடி கூறினார்.

ராஜஸ்தான் ஜெய்ப்பூர் மகாகேல் விளையாட்டு விழா பங்கேற்பாளருடன் உடன் பிரதமர் மோடி காணொலி வாயிலாக பேசியதாவது: இந்தியாவின் மாவட்ட அளவில் விளையாட்டுத்துறையின் உள்கட்டமைப்பு மேம்படுத்தப்பட்டு வருகிறது. பணப்பற்றாக்குறைவால் இளைஞர்கள் பின் தங்கி விடக்கூடாது என்பதில் அரசு தனிக்கவனம் செலுத்தி வருகிறது.

ராஜஸ்தான் இளைஞர்கள் பல விளையாட்டு திறமைகளை நாட்டிற்கு வழங்கியுள்ளனர். மேலும் பல்வேறு பதக்கங்களை வென்றுள்ளனர். ராஜஸ்தான் நிலம் அதன் இளைஞர்களின் உற்சாகத்திற்கும் திறமைக்கும் பெயர் பெற்றது.
குழந்தைகள் தங்கள் வீரத்தால் போர்க்களத்தை விளையாட்டு மைதானமாக மாற்றியமைக்கு வரலாறு சாட்சி. அதனால்தான், கடந்த காலத்திலிருந்து இன்று வரை, ராஜஸ்தானின் இளைஞர்கள் யாரையும் விட பின் தங்குவதில்லை. இவ்வாறு அவர் பேசினார்.
Advertisement