2023 - 24 நிதி ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டை சமர்ப்பித்த போது, கிராமப்புறங்களில் இளம் தொழில் முனைவோர்களால் விவசாயம் சார்ந்த ஸ்டார்ட்அப் தொடங்கப்படுவதை ஊக்குவிக்க வேளாண் ஊக்குவிப்பு நிதி அமைக்கப்படும் என்று நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.
இந்த வேளாண் ஊக்குவிப்பு நிதியை உருவாக்குவதன் மூலம் அக்ரி ஸ்டார்ட்அப்களுக்கு ஆதரவளிப்பது மற்றும் வேளாண் கடன் இலக்கை ரூ.2 லட்சம் கோடியாக அதிகரிப்பது, வேளாண் தொழில்நுட்பத்தை ஊக்குவிப்பது ஆகியவை இத்துறையில் உற்பத்தித்திறனை அதிகரிக்கவும், அதிக வேலை வாய்ப்புகளை உருவாக்கவும் உதவும் என்று இங்கிலாந்தைச் சேர்ந்த ஆராய்ச்சி நிறுவனமான குளோபல் டேட்டா தெரிவித்துள்ளது.
![]()
|
நூறு கோடி டாலர் சந்தை மதிப்பு கொண்ட ஸ்டார்ட்அப்களை யூனிகார்ன் என்பார்கள். இந்தியாவில் வேளாண் தொழில்நுட்பம் சார்ந்த ஸ்டார்ட்அப்களில் மட்டுமே இன்னும் எந்த ஒரு நிறுவனமும் யூனிகார்ன் அந்தஸ்தை பெறாமல் உள்ளது. தற்போது அத்துறையில் அரசின் கவனம் திரும்பியுள்ளது. விவசாயத்தை நிலையானதாக மாற்றுவது மட்டுமல்லாமல், கோடிக்கணக்கான மக்களுக்கு உணவுப் பாதுகாப்பை வழங்குவதற்கும் புதுமையான ஸ்டார்ட்அப்கள் செயல்படும் என்று நிபுணர்கள் எதிர்பார்க்கிறார்கள்.
புதியதாக உருவாக்கப்பட்டுள்ள வேளாண் ஊக்குவிப்பு நிதி குறித்து, அஜிலிட்டி வென்ச்சர்ஸின் இணை நிறுவனர் தியானு தாஸ் “விவசாயத்தில் ஈடுபட்டுள்ளவர்கள் ஆரோக்கியமான உணவு உற்பத்தி செய்ய தேவையான தொழில்நுட்ப வளர்ச்சிக்கும், ஆராய்ச்சிக்கும் மத்திய அரசின் இந்த நிதி உதவும். தோட்டக்கலை, மாற்று புரதங்கள், மீன் வளர்ப்பு மற்றும் உணவுக் கழிவுகளைக் குறைத்தல் ஆகியவற்றில் நிபுணத்துவம் பெற்ற ஸ்டார்ட்அப்களை உருவாக்க முடியும்” என கூறியுள்ளார்.
![]()
|