வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
/
காங்கேயம்:காங்கேயம் அடுத்துள்ள நத்தக்காடையூர் அருகே, காங்கேயம் இன மாடுகள், 15 லட்சம் ரூபாய்க்கு விற்றது.
திருப்பூர் மாவட்டம் காங்கேயம், நத்தக்காடையூர் அருகே, பழையகோட்டை மாட்டுத்தாவணியில் காங்கேயம் இன மாடுகளுக்கான சந்தை, ஞாயிறு தோறும் நடக்கிறது. திருப்பூர் மட்டுமின்றி, கோவை, ஈரோடு, கரூர், திண்டுக்கல், நாமக்கல், திருச்சி, சேலம் மாவட்ட விவசாயிகளும், மாடுகளை விற்பனைக்கு கொண்டு வருகின்றனர். தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், மாடுகளை வாங்க விவசாயிகள் வருகின்றனர்.
இடைத்தரகர் யாரும் இன்றி மாடுகளை நேரடியாக விலைபேசி வாங்கலாம். நேற்றைய சந்தைக்கு மாடுகள், காளைகள், கிடாரி மற்றும் காளை கன்றுகள் என 58 கால்நடைகள் வரத்தாகின. மாடுகள் 20 ஆயிரம் ரூபாய் முதல் 85 ஆயிரம் ரூபாய் வரை விற்றன. கிடாரி கன்று 12 ஆயிரம் முதல் 40 ஆயிரம் வரை விற்றது. மொத்தம் 35 கால்நடைகள் 15 லட்சம் ரூபாய்க்கு விற்பனை நடைபெற்றதாக சந்தை பொருப்பாளர் தெரிவித்தார்.
Advertisement