வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
புதுடில்லி: அதானியின் பங்குசந்தை விவகாரத்தால் நாட்டின் பொருளாதாரத்தில் எந்தவித பாதிப்பும் ஏற்படபோவதில்லை என மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்து உள்ளார்.
![]()
|
இது குறித்து அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: நாட்டின் பொருளாதார கொள்கை மற்றும் பொருளாதார சூழ்நிலை வலுவாக இருந்து வருகிறது. அவற்றிற்கு எந்தவித பாதிப்பும் இல்லை. அதானி விவகாரம் குறித்து செபி மற்றும் ஆர்.பி.ஐ., விசாரிக்கும் . பங்கு சந்தையில் நிலைத்தன்மையை உருவாக்க வேண்டிய பொறுப்பு செபிக்கே இருக்கிறது. பங்கு சந்தையில் ஏற்ற இறக்கங்கள் காணப்படுவது இயல்பானது தான்.
![]()
|
கடந்த நாட்களில் சுமார் 800 கோடி அமெரிக்க டாலர் அந்நியச்செலாவணி நம் நாட்டிற்கு கிடைத்துள்ளது. இவை இந்தியாவின் பொருளாதார வலிமையை நம்பிக்கையூட்டுவதாக உள்ளது.இவ்வாறு நிர்மலா சீதாராமன் தெரிவித்து உள்ளார்
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement