டிஜிபி சைலேந்திரபாபு போல் ஒரு நாளில் 100 கி.மீ சைக்கிள் ஓட்ட முடியுமா?

Updated : பிப் 05, 2023 | Added : பிப் 05, 2023 | கருத்துகள் (20) | |
Advertisement
தமிழக டிஜிபி சைலேந்திர பாபு அசாதாரணமாக ஒரு நாளில் நூறு கிலோ மீட்டர் சைக்கிள் ஓட்டித் திரும்பி, புத்துணர்ச்சியுடன் தனது பணிகளையும் பார்ப்பதாக அடிக்கடி வீடியோ வெளியிடுகிறார். பிட்னஸ் மற்றும் திட்டமிடல் இருந்தால் ஒரு நாளைக்கு 100 கி.மீ., சைக்கிள் ஓட்டலாம் என்பது சாத்தியமே. சைக்கிளிங் மீது பலருக்கும் தற்போது ஆர்வம் ஏற்பட்டுள்ளது. குறிப்பாக பெருநகரங்களில் இது அதிகம்
Cycling, 100Km, HealthyLifestyle

தமிழக டிஜிபி சைலேந்திர பாபு அசாதாரணமாக ஒரு நாளில் நூறு கிலோ மீட்டர் சைக்கிள் ஓட்டித் திரும்பி, புத்துணர்ச்சியுடன் தனது பணிகளையும் பார்ப்பதாக அடிக்கடி வீடியோ வெளியிடுகிறார். பிட்னஸ் மற்றும் திட்டமிடல் இருந்தால் ஒரு நாளைக்கு 100 கி.மீ., சைக்கிள் ஓட்டலாம் என்பது சாத்தியமே.

சைக்கிளிங் மீது பலருக்கும் தற்போது ஆர்வம் ஏற்பட்டுள்ளது. குறிப்பாக பெருநகரங்களில் இது அதிகம் காணப்படுகிறது. சினிமா பிரபலங்கள், அரசியல் பிரபலங்கள், துறைசார்ந்த உயரதிகாரிகள் என பலரும் சைக்கிளிங்கை தங்களது முதன்மையான பொழுதுபோக்காக மேற்கொள்கின்றனர். அதற்கு உதாரணமாக முதல்வர் ஸ்டாலின், நடிகர் ஆர்யா, டிஜிபி சைலேந்திர பாபு ஆகியோரைக் குறிப்பிடலாம்.

சைக்கிளிங்கால் ஏராளமான நன்மைகள் உண்டு. பெரிதாக செலவின்றி இந்த நன்மைகளை சைக்கிளிங்கால் பெற முடியும் என்பது இதன் சிறப்பு. இதயத்தை பலப்படுத்தும், தசைகளுக்கு வலிமையும், நெகிழ்வுத் தன்மையும் கொடுக்கும், மூட்டுகளின் இயக்கத்தை மேம்படுத்தும், நேர்த்தியான உடல்வாகை வழங்கும். உடல் கொழுப்பைக் கரைக்கும், மேலும் கவலை, மனச்சோர்வு கூட சைக்கிளிங் மேற்கொள்வதால் குறைவதாக மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.ஒரு நாளில் 100 கி.மீ


latest tamil news

சுற்றுலா மற்றும் சாகச நிலையில் பயணங்கள் மேற்கொள்பவர்கள் ஒரு நாளைக்கு சராசரியாக சுமார் 100 கி.மீ., செல்வார்கள். அனைத்து வயதினர், ஒல்லியானவர்கள், குண்டானவர்கள் என பல்வேறு பிட்னஸ் லெவலில் இருப்பவர்களும் இந்த தூரத்தை கடந்திருப்பதாக டிடிஏ குளோபல் சைக்கிளிங் குழுவினர் தெரிவிக்கின்றனர்.

அவர்கள் வெளியிட்டுள்ள ஒரு கட்டுரையில் சமதளமான தார் சாலையில் 10 கிலோ பொருட்களுடன் சராசரியாக மணிக்கு 20 கி.மீ., செல்லலாம். அதன்படி 5 மணி நேரத்தில் நூறு கிலோமீட்டரை அடையலாம். இதுவே சைக்கிளில் உள்ள பொருட்களின் எடை 20 கிலோ என்றால் மணிக்கு 18 கி.மீ., வேகம் தான் சராசரியாக செல்ல முடியும். அப்போது 5 மணி நேரத்தில் 90 கி.மீ., வரை தான் செல்ல முடியும். இது மலைப்பாங்கான பகுதி என்றால் இன்னும் தூரம் குறையும். எனவே உடைமகளைக் குறைவாக வைத்து பயணத்தை திட்டமிட்டால் ஒரு நாளில் 5 - 6 மணி நேரத்தில் 100 கிலோ மீட்டர் தொலைவை அடையலாம்.


குழு பயணம்


latest tamil news

தனியாக சைக்கிள் ஓட்டுவது அழகான அமைதியைத் தந்தாலும், நண்பர்களுடன் அல்லது குழுவாக சைக்கிள் ஓட்டும் போது, நீங்கள் நினைத்ததை விட அதிக தூரத்தை கடக்க உதவும்.

ஆரம்பத்தில் பழக்கமான ரூட்டில் நீண்ட பயணங்களை மேற்கொள்வது நல்லது. இது பயண நேரத்தை குறைக்கும். எங்கே உணவகங்கள் இருக்கும், குடிநீர் கிடைக்கும் என்பதெல்லாம் தெரிந்திருக்கும்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
வாசகர் கருத்து (20)

Nellai tamilan - Tirunelveli,இந்தியா
06-பிப்-202310:58:13 IST Report Abuse
Nellai tamilan டி ஜி பி யின் முதன்மையான வேலை சட்டம் ஒழுங்கை சரியாக பராமரிப்பதுவே அன்றி சைக்கிள் ஓட்டுவது இல்லை. முதல்வர் ஜிம்மில் பக்கத்து வீட்டு ஜன்னலை எட்டிப் பார்க்கும் உடற்பயிற்சி செய்து வருகிறார், டி ஜி பி சைக்கிளில் சுற்றுகிறார் மக்கள் என்ன செய்வது என்று தெரியாமல் முழிக்கிறார்கள்
Rate this:
Cancel
06-பிப்-202310:39:32 IST Report Abuse
theruvasagan வகிக்கற பதவியிலஉருப்படியா என்ன ஓட்டுனாருன்னு சொல்லாம பி.டி மாஸ்டர் மாதிரி எல்லாரும் சைக்கிள் ஓட்டுங்க என்கிறாரே. என்னத்த சொல்ல.
Rate this:
Cancel
Hariharan -  ( Posted via: Dinamalar Android App )
06-பிப்-202307:58:00 IST Report Abuse
Hariharan சைலேநந்திர பாபு அவர்களே, உங்கள் முதலமைச்சரிடம் சொல்லி உருப்படியான ரோடு போடச் சொல்லுங்கள். இப்பொழுது இருக்கும் ரோடுகளில் சைக்கிளிங் பண்ணினால் முதுகுவலி வந்துவிடும். ரோடு நன்றாக இருந்தால் எல்லோரும் உங்களைப்போல் முதலமைச்சரைப் போல் போஸ் கொடுக்க முடியும்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X