தமிழக டிஜிபி சைலேந்திர பாபு அசாதாரணமாக ஒரு நாளில் நூறு கிலோ மீட்டர் சைக்கிள் ஓட்டித் திரும்பி, புத்துணர்ச்சியுடன் தனது பணிகளையும் பார்ப்பதாக அடிக்கடி வீடியோ வெளியிடுகிறார். பிட்னஸ் மற்றும் திட்டமிடல் இருந்தால் ஒரு நாளைக்கு 100 கி.மீ., சைக்கிள் ஓட்டலாம் என்பது சாத்தியமே.
சைக்கிளிங் மீது பலருக்கும் தற்போது ஆர்வம் ஏற்பட்டுள்ளது. குறிப்பாக பெருநகரங்களில் இது அதிகம் காணப்படுகிறது. சினிமா பிரபலங்கள், அரசியல் பிரபலங்கள், துறைசார்ந்த உயரதிகாரிகள் என பலரும் சைக்கிளிங்கை தங்களது முதன்மையான பொழுதுபோக்காக மேற்கொள்கின்றனர். அதற்கு உதாரணமாக முதல்வர் ஸ்டாலின், நடிகர் ஆர்யா, டிஜிபி சைலேந்திர பாபு ஆகியோரைக் குறிப்பிடலாம்.
சைக்கிளிங்கால் ஏராளமான நன்மைகள் உண்டு. பெரிதாக செலவின்றி இந்த நன்மைகளை சைக்கிளிங்கால் பெற முடியும் என்பது இதன் சிறப்பு. இதயத்தை பலப்படுத்தும், தசைகளுக்கு வலிமையும், நெகிழ்வுத் தன்மையும் கொடுக்கும், மூட்டுகளின் இயக்கத்தை மேம்படுத்தும், நேர்த்தியான உடல்வாகை வழங்கும். உடல் கொழுப்பைக் கரைக்கும், மேலும் கவலை, மனச்சோர்வு கூட சைக்கிளிங் மேற்கொள்வதால் குறைவதாக மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.
ஒரு நாளில் 100 கி.மீ
![]()
|
அவர்கள் வெளியிட்டுள்ள ஒரு கட்டுரையில் சமதளமான தார் சாலையில் 10 கிலோ பொருட்களுடன் சராசரியாக மணிக்கு 20 கி.மீ., செல்லலாம். அதன்படி 5 மணி நேரத்தில் நூறு கிலோமீட்டரை அடையலாம். இதுவே சைக்கிளில் உள்ள பொருட்களின் எடை 20 கிலோ என்றால் மணிக்கு 18 கி.மீ., வேகம் தான் சராசரியாக செல்ல முடியும். அப்போது 5 மணி நேரத்தில் 90 கி.மீ., வரை தான் செல்ல முடியும். இது மலைப்பாங்கான பகுதி என்றால் இன்னும் தூரம் குறையும். எனவே உடைமகளைக் குறைவாக வைத்து பயணத்தை திட்டமிட்டால் ஒரு நாளில் 5 - 6 மணி நேரத்தில் 100 கிலோ மீட்டர் தொலைவை அடையலாம்.
குழு பயணம்
![]()
|
ஆரம்பத்தில் பழக்கமான ரூட்டில் நீண்ட பயணங்களை மேற்கொள்வது நல்லது. இது பயண நேரத்தை குறைக்கும். எங்கே உணவகங்கள் இருக்கும், குடிநீர் கிடைக்கும் என்பதெல்லாம் தெரிந்திருக்கும்.