வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
/
மயிலாடுதுறை:வள்ளலாரின் 200 வது பிறந்த நாளை முன்னிட்டு 400 கிராம் பச்சை பயிரால் 8 அடி உயரத்திற்கு வள்ளலாரின் உருவத்தை வரைந்த சமூக ஆர்வலர். வள்ளலாரின் மக்கள் தொண்டை கௌரவிக்கும் விதமாக அவரது உருவம் பொறித்த நாணயம் வெளியிட மத்திய அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அடுத்த கொள்ளிடம் பகுதியை சேர்ந்தவர் பிரபு சமூக ஆர்வலரான இவர் வள்ளலாரின் 200வது பிறந்த தினத்தை முன்னிட்டும் அவரது மக்கள் தொண்டை கவுரவிக்கும் விதமாகவும் வள்ளலார் உருவம் பொறித்த நாணயம் வெளியிட கோரி மத்திய அரசின் கவனத்தை ஈர்க்கும் விதமாக சிறுதானிய வகையைச் சேர்ந்த பச்சைப் பயறு கொண்டு வள்ளலாரின் திருவுருவத்தை வரைந்துள்ளார். 400 கிராம் பச்சை பயிறு, 150 கிராம் பசை கொண்டு 5 அடி அகலம் 8 அடி உயரத்திற்கு வள்ளலாரின் திருவுருவத்தை வரைந்துள்ளார்.
இது குறித்து அவர் தெரிவிக்கையில். வள்ளலார் ஜாதி மதங்களைக் கடந்து மக்கள் தொண்டாற்றியவர் மக்களுக்கு பல்வேறு போதனைகளை வழங்கி அருட்கொடை வழங்கியவர் அவரது 200 ஆம் ஆண்டு பிறந்த நாள் விழா தமிழக முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது எனவே அவரது மக்கள் தொண்டை கவுரவிக்கும் விதமாக வள்ளலாரின் உருவம் பொறித்த நாணயம் வெளியிட கோரி மத்திய அரசின் கவனத்தை ஈர்ப்பதற்காக தான் இந்த முயற்சியை மேற்கொண்டுள்ளதாகவும் மத்திய அரசு மற்றும் மத்திய நிதி அமைச்சகத்துக்கும் இது குறித்து கோரிக்கை மனு அளித்துள்ளதாகவும் சமூக சேவகர் பிரபு தெரிவித்தார்.
Advertisement