வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
புதுடில்லி: புற்றுநோயால் பாதிக்கப்பட்ட இந்திய பெண் பயணிக்கு உதவ மறுத்ததுடன் அவரை விமானத்தில் இருந்து இறக்கி விட்டது அமெரிக்க விமான நிறுவனம்.
![]()
|
இந்தியாவை சேர்ந்த பெண் பயணி மீனாட்சி சென்குப்தா.இவர் கடந்த ஜனவரி மாதம் 30 ம்தேதி புதுடில்லியில் இருந்து நியூயார்க் செல்வதற்காக அமெரிக்காவை சேர்ந்த விமான நிறுவனம் ஒன்றில் டிக்கெட் முன்பதிவு செய்திருந்தார். அன்றைய தினம் வழக்கமான பரிசோதனைகள் முடிந்த பின்னர் விமானத்திற்குள் ஏறி தனது இருக்கையில் அமர்ந்திருந்தார். அப்போது பயணிகளுக்கு உதவி செய்து கொண்டிருந்த விமான சிப்பந்தி பெண் ஒருவர் மீனாட்சி சென் குப்தாவிடம் கீழே வைக்கப்பட்டுள்ள பையை இருக்கையின் மேல்பகுதியில் உள்ள கேபினிற்குள் வைக்கும்படி கூறி உள்ளார்.
தான் புற்று நோயால் பாதிக்கப்பட்டு உள்ளதாகவும், பையை மேலே தூக்கி வைக்க முடியவில்லை தாங்கள் உதவி செய்ய வேண்டும் என பணிப்பெண்ணிடம் மீனாட்சி கோரிக்கை விடுத்திருந்தார். அதற்கு பதில் அளித்த பணிப்பெண் ஊழியர் உதவி செய்ய மறுத்ததுடன் அதை செய்வது தன்னுடைய வேலை இல்லை என கூறி உள்ளார். மேலும் விமான பணிப்பெண்கள் அலட்சியமாக இருந்துள்ளதாக கூறி உள்ளார். மேலும் நான் விமானத்தில் இருந்து வெளியேற வேண்டும் என்று அவர்கள் சொன்னார்கள். என்னை வெளியேற்றும் முடிவில் அவர்கள் கூட்டாக இருந்தனர். பின்னர் தான் விமானத்தில் இருந்து இறக்கி விடப்பட்டதாகவும் மீனாட்சி குற்றம் சாட்டினார்.
இது குறித்து சம்பந்தப்பட்ட விமான நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் குழு உறுப்பினர்களின் அறிவுறுத்தல்களை பின்பற்ற தவறியதால் இடையூறு விளைவித்ததாக கருதப்படும் பயணி விமானத்தில் இருந்து பயணி வெளியேற்றப்பட்டார். என தெரிவித்து உள்ளது.
![]()
|
இதனிடையே சிவில் விமானப் போக்குவரத்து இயக்குனகரம் (டிஜிசிஏ) இந்த சம்பவம் குறித்து விமான நிறுவனத்திடம் இருந்து அறிக்கை கேட்டுள்ளது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement