வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
நாந்தேட்:இனி வரும் ஆட்சி விவசாயிகளின் ஆட்சி, விவசாயிகளும் விதிகளை எழுதவும் உருவாக்கவும் முடியும் என தெலங்கானா முதல்வர் சந்திரசேகரராவ் தெரிவித்து உள்ளார்.
![]()
|
தெலங்கானா முதல்வர் சந்திரசேகரராவ் தன்னுடைய தெலங்கான ராஷ்டிரிய சமதி கட்சியை பிஆர் எஸ் பாரத் ராஷ்டிரிய சமிதி என்று பெயரை மாற்றினார். அதற்கேற்ப பல்வேறு மாநிலங்களில் கட்சியை விரிவு படுத்தும் நோக்கில் செயல்பட்டு வருகிறார். இதன் ஒரு கட்டமாக மகாராஷ்டிரா மாநிலம் நாந்தேட்டில் நடந்த கூட்டத்தில் அவர் பேசியதாவது: நமது நாட்டில் விவசாயிகள் 42 சதவீதத்திற்கும் அதிகமாக இருக்கின்றனர். விவசாய தொழிலாளர்களை கணக்கிட்டால் அவை 50 சதவீதத்திற்கும் அதிகமாக இருப்பர். இது அரசாங்கத்தை அமைக்க போதுமானது. சுதந்திரம் அடைந்த 75 ஆண்டுகள் என்பது ஒரு நீண்ட காலம். விவசாயிகளும் விதிகளை எழுதவும் உருவாக்கவும் முடியும். என்றார்.
![]()
|
மகாராஷ்டிராவில் காங்., 54 ஆண்டுகளும், பா.ஜ.,16 ஆண்டுகளும் மாநிலத்தை ஆண்டுள்ளன. இருப்பினும் மாநிலத்தில் தண்ணீர் பற்றாக்குறை நிலவுகிறது.விவசாயிகள் ஆட்சி அமைந்தால் தண்ணீர் பிரச்னை தீர்க்கப்படும். என்றார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement