தேங்காய் மீது சத்தியம்!
எல்லை மாவட்டத்தின் லட்சுமிகரமான பெண் எம்.எல்.ஏ., இந்த தேர்தல்ல எப்படியும் ஜெயிக்கணுமுன்னு பகீரத பிரயத்னம் பண்ணிட்டு இருக்காங்க. இவருக்கு எதிராக பஞ்ச பாண்டவ சகோதரர்களில் ஒருவரு எதிர் பாலிடிக்ஸ் பண்ணிட்டு வராரு. பத்தாததுக்கு ஆளுங்கட்சி ஆளுங்களும் எதிர்பிரசாரம் பண்ணிட்டு வராங்களாம்.
அதனால அவரு சில மாசத்துக்கு முன்னாடியே பரிசு பொருட்களை கொடுக்க ஆரம்பிச்சிட்டாரு. இந்த பரிசு பொருளை நம்பி ஓட்டு விழுமாங்கற சந்தேகம் பெண் எம்.எல்.ஏ.,க்கே வந்திருச்சாம். அதனால இப்போ சத்தியம் வாங்கிட்டு வராராம். அவரோட ஆதரவாளர்கள் தொகுதியில் இருக்கறவங்க வீடுகளுக்கு போயி தேங்காய் மேல சத்தியம் வாங்கிட்டு வராங்களாம். சத்தியத்துக்கு பயந்து ஜனங்க தனக்கு கண்டிப்பா ஓட்டு போடுவாங்கன்னு நம்புறாங்களாம்.**போட்டி பயம்!
கரும்பு அதிகம் விளைவிக்கும் மாவட்டம் புல்லுக்கட்டின் கோட்டை என கருதப்படுது. அங்க இருக்கற ஏழு தொகுதில ஆறுல தொட்ட கவுடரின் இளைய மகனுக்கு செல்வாக்கு அதிகம். ஒரு தொகுதி மட்டும் பெரிய மகனின் பிடில இருக்கு. இந்த தொகுதிக்கு சமீபத்துல வெளியான வேட்பாளர் பட்டியல்ல இளைய மகன் ஆதரவு பெற்றவருக்கு 'சீட்' வழங்கப்பட்டிருக்கு.
இந்த தொகுதில இதுக்கு முன்ன நடந்த இடைத்தேர்தல்ல பெரிய மகனின் ஆதரவாளருக்கு 'சீட்' கொடுக்கப்பட்டிருந்தது. இதனால இளைய மகன் பிரசாரத்துக்கே போகாம ஒதுங்கி இருந்தாரு. பெரிய மகன் முடிந்த வரை பிரசாரம் பண்ணிப்பார்த்தாரு. ஆனாலும் குறைந்த வித்தியாசத்துல பெரிய மகனின் ஆதரவாளர் தோத்து போனாரு.
இப்போ அவரே 'சீட்' எதிர்பார்த்து இருந்தாரு. ஆனா அவருக்கு பதிலா இளைய மகனின் ஆதரவாளருக்கு 'சீட்' கொடுக்கப்பட்டிருக்கு. அதனால ஏமாற்றம் அடைந்த பெரிய மகனின் ஆதரவாளர் இந்த தேர்தல்ல போட்டி வேட்பாளரா நிக்க முடிவு பண்ணி இருக்காராம். இது சம்பந்தமாக அங்க இருக்கற சில சமுதாய தலைவர்களை பேச்சு நடத்த அழைப்பு விடுத்து இருக்காரு. இது புல்லுக்கட்டுக்கு அதிர்ச்சியை கொடுத்து இருக்காம்.
**ராஜினாமா தொடருதாம்!
குவாரி அதிபரு புது கட்சியை துவங்கி கல்யாண கர்நாடகா முழுதும் காலில் சக்கரம் கட்டி கொண்டு சுத்துறாரு. இவரோட சுற்றுப்பயணத்தால கல்யாண கர்நாடகா பகுதில காவிக்கு சறுக்கல் ஏற்படும் சூழ்நிலை ஏற்பட்டிருக்காம். ஏன்னா குவாரி உட்பட அதை சுற்றியுள்ள மூணு மாவட்டங்களில் இருக்கும் இரண்டாம் கட்ட காவி கட்சி தலைவர்கள் வரிசையாக ராஜினாமா பண்ணிட்டு வாராங்க. குவாரி அதிபரோட புது கட்சில ஐக்கியம் ஆகிறாங்க.அதோட குவாரி அதிபரின் நண்பர் வழக்கமாக போட்டியிடும் தொகுதியில இருக்கற காவி நிர்வாகிகள் ராஜினாமா பண்ணிட்டு வராங்க. இது கட்சிக்கு மட்டும் அல்ல; நண்பருக்கும் அதிர்ச்சியை கொடுத்து இருக்காம். எதையும் செய்து காட்டுவாருன்னு பேர் எடுத்த குவாரி அதிபரின் இரண்டாவது அரசியல் இன்னிங்ஸ், காவி கட்சிக்கு கல்யாண கர்நாடகவுல நிச்சயம் பாதிப்பை ஏற்படுத்தும்னு இப்பவே சொல்லப்படுது. இதை எப்படி சமாளிக்கப்போறாங்களோ அப்படீன்னு தொண்டர்கள் எதிர்பார்த்துட்டு இருக்காங்களாம்.
**புல்லுக்கட்டுக்கு அதிர்ச்சி!புல்லுக்கட்டு தற்போது நடத்தி வரும் அஞ்சுரத்னம் யாத்திரைக்கு நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. இதனால அவரு உள்ளுக்குள்ள மகிழ்ச்சி இருந்தாலும், அதை அவரால முழுமையா அனுபவிக்க முடியல. ஏன்னா அவரை சுத்தி நடக்கும் விஷயங்கள்தான் அவரை பாடாய்படுத்துதாம். இப்போ இருக்கற நேரத்துல அவரோட கட்சி எம்.எல்.ஏ.,க்கள் பெரும்பாலானவங்க எப்போ எங்க தாவலாம் அப்படீங்கற நிலைல இருக்காங்களாம். அதனால இப்போதய நிலைல முன்னாள் முதல்வரு யாரையும் நம்பாம இருக்காரு. ஏன்னா தன்னோட சொந்த தொகுதி இருக்கும் பட்டு மாவட்டம் முதல் தலைநகரை உருவாக்கின மன்னர் சமாதி இருக்கும் மாவட்டம் வரை எல்லா தொகுதி புல்லுக்கட்டு எம்.எல்.ஏ.,க்கள் ஆளுங்கட்சி அமைச்சர்களுடன் பகிரங்கமாவே தொடர்பில் இருக்காங்க. இதை அவருக்கு தெரியப்படுத்தியதும், கட்சில இருக்கற தலைவர்கள்தான். இதை வச்சி கட்சியின் அடுதத கட்ட தலைவர்கள் 'சீட்' வாங்கும் முயற்சில இருக்காங்களாம்.
**
தேங்காய் மீது சத்தியம்!
எல்லை மாவட்டத்தின் லட்சுமிகரமான பெண் எம்.எல்.ஏ., இந்த தேர்தல்ல எப்படியும் ஜெயிக்கணுமுன்னு பகீரத பிரயத்னம் பண்ணிட்டு இருக்காங்க. இவருக்கு எதிராக பஞ்ச பாண்டவ சகோதரர்களில் ஒருவரு எதிர் பாலிடிக்ஸ் பண்ணிட்டு வராரு. பத்தாததுக்கு ஆளுங்கட்சி ஆளுங்களும் எதிர்பிரசாரம் பண்ணிட்டு வராங்களாம்.
அதனால அவரு சில மாசத்துக்கு முன்னாடியே பரிசு பொருட்களை கொடுக்க ஆரம்பிச்சிட்டாரு. இந்த பரிசு பொருளை நம்பி ஓட்டு விழுமாங்கற சந்தேகம் பெண் எம்.எல்.ஏ.,க்கே வந்திருச்சாம். அதனால இப்போ சத்தியம் வாங்கிட்டு வராராம். அவரோட ஆதரவாளர்கள் தொகுதியில் இருக்கறவங்க வீடுகளுக்கு போயி தேங்காய் மேல சத்தியம் வாங்கிட்டு வராங்களாம். சத்தியத்துக்கு பயந்து ஜனங்க தனக்கு கண்டிப்பா ஓட்டு போடுவாங்கன்னு நம்புறாங்களாம்.
போட்டி பயம்!
கரும்பு அதிகம் விளைவிக்கும் மாவட்டம் புல்லுக்கட்டின் கோட்டை என கருதப்படுது. அங்க இருக்கற ஏழு தொகுதில ஆறுல தொட்ட கவுடரின் இளைய மகனுக்கு செல்வாக்கு அதிகம். ஒரு தொகுதி மட்டும் பெரிய மகனின் பிடில இருக்கு. இந்த தொகுதிக்கு சமீபத்துல வெளியான வேட்பாளர் பட்டியல்ல இளைய மகன் ஆதரவு பெற்றவருக்கு 'சீட்' வழங்கப்பட்டிருக்கு. இந்த தொகுதில இதுக்கு முன்ன நடந்த இடைத்தேர்தல்ல பெரிய மகனின் ஆதரவாளருக்கு 'சீட்' கொடுக்கப்பட்டிருந்தது. இதனால இளைய மகன் பிரசாரத்துக்கே போகாம ஒதுங்கி இருந்தாரு. பெரிய மகன் முடிந்த வரை பிரசாரம் பண்ணிப்பார்த்தாரு. ஆனாலும் குறைந்த வித்தியாசத்துல பெரிய மகனின் ஆதரவாளர் தோத்து போனாரு.
இப்போ அவரே 'சீட்' எதிர்பார்த்து இருந்தாரு. ஆனா அவருக்கு பதிலா இளைய மகனின் ஆதரவாளருக்கு 'சீட்' கொடுக்கப்பட்டிருக்கு. அதனால ஏமாற்றம் அடைந்த பெரிய மகனின் ஆதரவாளர் இந்த தேர்தல்ல போட்டி வேட்பாளரா நிக்க முடிவு பண்ணி இருக்காராம். இது சம்பந்தமாக அங்க இருக்கற சில சமுதாய தலைவர்களை பேச்சு நடத்த அழைப்பு விடுத்து இருக்காரு. இது புல்லுக்கட்டுக்கு அதிர்ச்சியை கொடுத்து இருக்காம்.
ராஜினாமா தொடருதாம்!
குவாரி அதிபரு புது கட்சியை துவங்கி கல்யாண கர்நாடகா முழுதும் காலில் சக்கரம் கட்டி கொண்டு சுத்துறாரு. இவரோட சுற்றுப்பயணத்தால கல்யாண கர்நாடகா பகுதில காவிக்கு சறுக்கல் ஏற்படும் சூழ்நிலை ஏற்பட்டிருக்காம்.
ஏன்னா குவாரி உட்பட அதை சுற்றியுள்ள மூணு மாவட்டங்களில் இருக்கும் இரண்டாம் கட்ட காவி கட்சி தலைவர்கள் வரிசையாக ராஜினாமா பண்ணிட்டு வாராங்க. குவாரி அதிபரோட புது கட்சில ஐக்கியம் ஆகிறாங்க.
அதோட குவாரி அதிபரின் நண்பர் வழக்கமாக போட்டியிடும் தொகுதியில இருக்கற காவி நிர்வாகிகள் ராஜினாமா பண்ணிட்டு வராங்க. இது கட்சிக்கு மட்டும் அல்ல; நண்பருக்கும் அதிர்ச்சியை கொடுத்து இருக்காம்.
எதையும் செய்து காட்டுவாருன்னு பேர் எடுத்த குவாரி அதிபரின் இரண்டாவது அரசியல் இன்னிங்ஸ், காவி கட்சிக்கு கல்யாண கர்நாடகவுல நிச்சயம் பாதிப்பை ஏற்படுத்தும்னு இப்பவே சொல்லப்படுது. இதை எப்படி சமாளிக்கப்போறாங்களோ அப்படீன்னு தொண்டர்கள் எதிர்பார்த்துட்டு இருக்காங்களாம்.
புல்லுக்கட்டுக்கு அதிர்ச்சி!
புல்லுக்கட்டு தற்போது நடத்தி வரும் அஞ்சுரத்னம் யாத்திரைக்கு நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. இதனால அவரு உள்ளுக்குள்ள மகிழ்ச்சி இருந்தாலும், அதை அவரால முழுமையா அனுபவிக்க முடியல. ஏன்னா அவரை சுத்தி நடக்கும் விஷயங்கள்தான் அவரை பாடாய்படுத்துதாம். இப்போ இருக்கற நேரத்துல அவரோட கட்சி எம்.எல்.ஏ.,க்கள் பெரும்பாலானவங்க எப்போ எங்க தாவலாம் அப்படீங்கற நிலைல இருக்காங்களாம்.
அதனால இப்போதய நிலைல முன்னாள் முதல்வரு யாரையும் நம்பாம இருக்காரு. ஏன்னா தன்னோட சொந்த தொகுதி இருக்கும் பட்டு மாவட்டம் முதல் தலைநகரை உருவாக்கின மன்னர் சமாதி இருக்கும் மாவட்டம் வரை எல்லா தொகுதி புல்லுக்கட்டு எம்.எல்.ஏ.,க்கள் ஆளுங்கட்சி அமைச்சர்களுடன் பகிரங்கமாவே தொடர்பில் இருக்காங்க. இதை அவருக்கு தெரியப்படுத்தியதும், கட்சில இருக்கற தலைவர்கள்தான்.
இதை வச்சி கட்சியின் அடுதத கட்ட தலைவர்கள் 'சீட்' வாங்கும் முயற்சில இருக்காங்களாம்.