சட்டசபை தேர்தல் நெருங்கும் நிலையில், தேவனஹள்ளி தொகுதி ம.ஜ.த.,வில் அதிருப்தி துவங்கியுள்ளதால், கட்சி மேலிடத்துக்கு தலைவலி ஏற்பட்டுள்ளது.
பெங்களூரு ரூரல், தேவனஹள்ளி சட்டசபை தொகுதிக்கு, ம.ஜ.த., வேட்பாளராக நிசர்கா நாராயண சாமி, வேட்பாளராகஅறிவிக்கப்பட்டுள்ளார். இதனால் அதிருப்தியடைந்த தொண்டர்கள், அவருக்கு சீட் தரக்கூடாது. அவருக்கு சீட் கொடுத்தால், கட்சிக்கு தோல்வி உறுதி என, எச்சரித்துள்ளனர்.
தேவனஹள்ளியில், புதிய வேட்பாளருக்கு சீட் அளிக்கும்படி, தொண்டர்கள் வலியுறுத்துகின்றனர். பெங்களூரில், குமாரசாமி வீட்டு முன் குவிந்து, நேற்று போராட்டம் நடத்தினர்.
- நமது நிருபர் -