பெங்களூரு,;பா.ஜ., போன்று 'வீடு தோறும் ம.ஜ.த.,' திட்டத்தை செயல்படுத்த அக்கட்சி வேட்பாளர்கள், 'சீட்' கேட்போருக்கு, கட்சி தலைமை உத்தரவிட்டுள்ளது.
கர்நாடக சட்டசபை தேர்தலை ஒட்டி, பா.ஜ., சார்பில் 'வீடு தோறும் பா.ஜ.,' என்ற கட்சியின் சின்னத்தை வரைந்து, பிரசாரம் மேற்கொண்டு வருகின்றனர்.
அதே போன்று, ம.ஜ.த.,வும், அறிவிக்கப்பட்ட வேட்பாளர்கள், சீட் கேட்போர், கிராமப்புறங்களில் 'பஞ்சரத்ன யாத்திரை' நடத்துமாறு உத்தரவிட்டிருந்தது.
தற்போது, கிராமப்புறங்களில் வீடு தோறும் கட்சியின் சின்னத்தை வரைந்து, பிரசாரம் மேற்கொள்ளவும் உத்தரவிட்டுள்ளது.
இந்நிகழ்ச்சியில், ஒவ்வொரு கிராமத்திற்கும் குறைந்தபட்ச்ம 100 தொண்டர்கள் இப்பணியில் ஈடுபட வேண்டும்.
வாரத்தில் மூன்று நாட்கள் கிராமத்தில் தங்க வேண்டும்; இரண்டரை மாதங்களில் கட்சியை மக்களிடம் கொண்டு செல்ல வேண்டும், என கட்சி மேலிடம் உத்தரவிட்டுள்ளது.