பெலகாவி ரூரல் தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏ., லட்சுமி ஹெப்பால்கர், இம்முறையும் போட்டியிடுகிறார். தன் வெற்றிக்காக பூஜை, புனஸ்காரங்களில் பங்கேற்கிறார்.
பெலகாவியின், வடகாவில் நேற்று முன் தினம், பனசங்கரி தேவி திருவிழா நடந்தது. இதில் அவர் பங்கேற்றார்.
பின் அவர் கூறியதாவது:
ஆன்மிக பணிகள், மனிதனின் வாழ்க்கையில் தாக்கங்களை ஏற்படுத்தும். நான், எனது என்ற மனப்போக்கை விட்டு விட்டு, உலக நன்மையை விரும்பும் மக்களுக்கு, தெய்வ சக்திகள் நன்மையை செய்யும். எனவே உலக மக்களுக்கு நல்லதுசெய்யும்படி, பனசங்கரி தேவியிடம் பிரார்த்தனை செய்தேன்.
இவ்வாறு அவர் கூறினார்
- நமது நிருபர் -.