கர்நாடக சட்டசபை தேர்தலை முன்னிட்டு, பிரதமர் நரேந்திர மோடி, அவ்வப்போது மாநிலத்துக்கு வருவதால், காங்கிரசார் கடுப்படைந்துள்ளனர்.
காங்., முன்னாள் அமைச்சர் எம்.பி.பாட்டீல் அளித்த பேட்டி:
முன்னாள் முதல்வர் எடியூரப்பாவை, பஞ்சராக்கி விட்டனர். இம்முறை சட்டசபை தேர்தலில், பா.ஜ., 60 தொகுதிகளில் வெற்றி பெற்றாலே, பெரிய விஷயம். பா.ஜ.,வின் ஏழெட்டு எம்.எல்.ஏ.,க்கள், காங்கிரசுக்கு வருகின்றனர். நாங்கள் ஆட்சியை பிடிப்பது உறுதி.
கர்நாடகாவில், பா.ஜ., - ஐ.சி.யு.,வில் உள்ளது. எனவே பிரதமர் மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை அவ்வப்போது மாநிலத்துக்கு வரவழைக்கின்றனர். மோடி நிகழ்ச்சியை விட, ராகுல் நிகழ்ச்சிக்கு 100 மடங்கு அதிகமானமக்கள் வந்திருந்தனர்.
காங்கிரசில் முதல்வராகும் தகுதி, பலருக்கு உள்ளது. சித்தராமையா, சிவகுமார் உட்பட, பலர் உள்ளனர். கட்சி ஆட்சிக்கு வந்த பின், யார் முதல்வர் என்பதை முடிவு செய்வோம்.
இவ்வாறு அவர் கூறினார்
- நமது நிருபர் -.