பீதர்,-''கர்நாடகாவில் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால், சிறுபான்மையினரின் மேம்பாட்டுக்கு, 10 ஆயிரம் கோடி ரூபாயும்; கல்யாண கர்நாடகாவில் உள் 4 சட்டசபை தொகுதி மேம்பாட்டுக்கு, 5,000 கோடி ரூபாயும் வழங்கப்படும்,'' என எதிர்க்கட்சி தலைவர் சித்தராமையா உறுதியளித்தார்.
பீதர் தெற்கு சட்டசபை தொகுதி கூட்டத்தில், அவர் பேசியதாவது:
சிறுபான்மையினர் வெறுப்பதன் மூலம் பா.ஜ., அரசு அரசியல் செய்து வருகிறது. நுாற்றுக்கணக்கான ஆண்டுகளாக நடந்து வரும் ஒலிபெருக்கு பிரார்த்தனைக்கு எதிர்ப்பு உள்ளது.
சிறுபான்மையினர் சந்தைகள், கண்காட்சிகளில் வியாபாரம் செய்வது தடுத்தல், வியாபாரம் செய்வோருக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டால், அவர்கள் எப்படி வாழ முடியும்.
கர்நாடகாவில் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால், சிறுபான்மையினரின் மேம்பாட்டுக்கு, 10 ஆயிரம் கோடி ரூபாயும்; கல்யாண கர்நாடகாவில் உள் 4 சட்டசபை தொகுதி மேம்பாட்டுக்கு, 5,௦௦௦ கோடி ரூபாயும் வழங்கப்படும்.
மாநில பா.ஜ., தலைவர் நளின் குமார் கட்டீல் 'ஜோக்கர்' போன்றவர். சாலைகள், சாக்கடைகள் அமைப்பதை விட, 'லவ் ஜிகாத்' எதிர்ப்பது முக்கியம் என சமீபத்தில் அறிக்கை வெளியிட்டார்.
அவர்களின் பணி மக்களை உயர்த்துவது. நாட்டில் வளர்ச்சியை பற்றி சிந்திக்காதவர்களுக்கு தேர்தலில் வாக்காளர்கள் தகுந்த பாடம் புகட்ட வேண்டும்.
பா.ஜ., ஆட்சியால் மாநில மக்கள் சலிப்படைந்துள்ளனர். இதற்கு வெறுப்பு, ஹிந்துத்துவா, வகுப்புவாதம், சமூகப்பிரிவே காரணம்.
அரசியல் சட்டத்தின் மீது அக்கட்சிக்கு மரியாதை இல்லை. அம்பேத்கர் சிறந்த அரசியல் அமைப்பை உருவாக்கினார்.
எனினும், அரசியல் அமைப்பு உருவாக்கப்பட்ட பின் கோல்வால்கர், வீர் சாவர்க்கர் ஆகியோர் அரசியல் சட்டத்துக்கு எதிராக பேசினர்.
இவ்வாறு அவர் பேசினார்.
'மக்கள் குரல்' யாத்திரையில் பஸ்சில் வந்த சித்தராமையாவுக்கு, தொண்டர்கள் வரவேற்பு அளித்தனர். இடம்: பீதர்.