மாண்டியா சுயேச்சை எம்.பி., சுமலதா, சில நாட்களாக, மாநில காங்கிரஸ் தலைவர் சிவகுமாரை கடுமையாக விமர்சித்து வருகிறார்.
அப்படி இருந்தும், சில காங்கிரஸ் தலைவர்கள் அவருடன் நெருங்கிய தொடர்பில் உள்ளனர். இதனால், காங்கிரசுக்கு தர்ம சங்கடம் ஏற்பட்டுள்ளது.
நிலைமையை சமாளிக்க, மாண்டியா மாவட்ட காங்கிரஸ் தலைவர் கங்காதர், தனது கட்சி நிர்வாகிகள், தொண்டர்களுக்கு பிறப்பித்த உத்தரவில் கூறப்பட்டுள்ளதாவது:
சுமலதாவின் அரசியல் முடிவுக்கும், எங்கள் கட்சிக்கும் எந்த தொடர்பும் இல்லை. லோக்சபா தேர்தலுக்கு பின் நடந்த அனைத்து தேர்தல்களிலும் காங்கிரசுக்கு எதிராக சுமலதா செயல்பட்டார். அவரின் கூட்டங்களுக்கு, காங்கிரஸ் கட்சியினர் செல்வது நியாயமானதல்ல. அதற்கான தேவையும் இல்லை. சுமலதாவின் வார்த்தைகள் அனைத்தும் பா.ஜ., அரசுக்கு சாதகமாக உள்ளது. காங்கிரசுக்கு ஆதரவாக ஒரு அறிக்கை கூட கொடுக்கவில்லை.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது
-நமது நிருபர்-.