மதுக்கரை;நாச்சிபாளையத்திலுள்ள ரமண மகரிஷி டிரஸ்ட்டின் ஐந்தாமாண்டு, மாணவர்களுக்கான பரிசளிப்பு மற்றும் புதிய கட்டடம் திறப்பு ஆகிய முப்பெரும் விழா, டிரஸ்ட் தலைவர் சந்திரசேகரன் தலைமையில் நடந்தது.
புதிய கட்டடத்தை பொருளாளர் செந்தில் திறந்து வைத்தார். பாலத்துறை, நாச்சிபாளையம், வழுக்குப்பாறை அரசு பள்ளிகளை சேர்ந்த, 150 மாணவர்கள் பங்கேற்று, யோகாசனத்தில் மூன்று நிலைகளை செய்து காட்டினர்.
வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு, சான்றிதழை முத்தூஸ் மருத்துவமனை டாக்டர் முத்து சரவணகுமார் வழங்கினார்.
இதையடுத்து, ஏழை மாணவர்களுக்கு கல்வி கட்டணம் செலுத்தும் ஸ்டடி வேர்ல்டு கல்லூரி முதல்வர் கோமதி, டாக்டர் முத்து சரவணகுமார், மாநகர போலீஸ் துணை கமிஷனர் சந்தீஷ் ஆகியோருக்கு கவுரவ விருது வழங்கப்பட்டது.
புதிய கட்டடத்துக்கான நிலம் வழங்கிய சிவகுமார் உட்பட, 200க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். ஏற்பாடுகளை, டிரஸ்டின் செயலாளர் சுவாமி போதிவர்தன் செய்திருந்தார்.