கோவை;கோவை சாய்பாபா காலனி என்.எஸ்.ஆர்., ரோட்டில், விஸ்ருதாவின் புதிய தங்க, வெள்ளி நகைக்கடை திறப்பு விழா நேற்று நடந்தது.
நகைக்கடை உரிமையாளர்களின் பெற்றோர் முத்துகிருஷ்ணன், ஸ்ரீனிவாசன் மற்றும் மணி ஆகியோர், புதிய ஜூவல்லரியை திறந்து வைத்தனர். சிறப்பு விருந்தினர்கள் ஸ்ரீலட்சுமி, வசந்தா ஸ்ரீனிவாசன், லட்சுமி மணியம் ஆகியோர் குத்துவிளக்கு ஏற்றினர்.
ஜூவல்லரி பங்குதாரர்கள் ரவிசங்கர் மற்றும் வெங்கடேஷ் கூறியதாவது:
எங்களுக்கு காந்திபுரம் கிராஸ்கட் ரோட்டில், ஏற்கனவே ஜூவல்லரி ஷோரூம் உள்ளது. இது இரண்டாவது கிளை. இங்கு, தங்க நகைகளில் அனைத்து டிசைன்களும் உள்ளன. வெள்ளி நகைகள் மற்றும் வெள்ளிப்பொருட்களும் உள்ளன. வாடிக்கையாளர்கள் விரும்பும் டிசைன்களில், நகை செய்து கொடுக்கிறோம். நகைகள் வாங்கும் வாடிக்கையாளர்கள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.
இவ்வாறு, அவர்கள் கூறினர்.
பங்குதாரர்கள் பால ஜெயப்பிரகாஷ், நிர்மலா, வாசந்தி, வாசவி, ஜெயக்குமார் பிரபாவதி, ஸ்ரீராம், சுமதி, ராஜகோபால், யாமினி, ஜெயப்பிரகாஷ், விசாலாட்சி, மனோகரன் மற்றும் லதா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.