கோனனகுண்டே-அடுக்குமாடி குடியிருப்பில் வேலை செய்த, இருவர் மர்மமான முறையில் இறந்தனர்.
பெங்களூரு கோனனகுண்டே கிராசில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில், கழிவுநீர் சுத்திகரிப்பு மையம் உள்ளது. அங்கு துமகூரு மாவட்டம் கொரட்டகரேயை சேர்ந்த ரவிகுமார், 20. ஒடிசாவை சேர்ந்த திலீப்குமார், 25, ஆகியோர் வேலை செய்தனர்.
நேற்று முன்தினம் மதியம், இருவரும் வேலைக்கு வந்தனர். இரவு 7.30 மணிக்கு மையத்தின் மேற்பார்வையாளர் சுத்திகரிப்பு மையத்திற்கு வந்து பார்த்தார். அப்போது இருவரும் அங்கு இல்லை. மொபைல் போனில் தொடர்பு கொண்டாலும் இருவரும் எடுக்கவில்லை. அந்த மையத்தின் பின்பக்கத்தில் இருவரும் மர்மமான முறையில் இறந்து கிடந்தனர்.