அண்ணார் வீட்டில் 'பூ'! :தம்பி வீட்டில் 'கை'!
முனிசி., யில் 'மாஜி' தலைவராக இருந்தவர் சூ.பாளையம் சேர்ந்தவர். இவரையும், இவரது வாரிசையும் முனிசி., தேர்தலில் ஜெயிக்க விடாமல் தடுக்க காரணமாக இருந்தவர் கைக்கார அசெம்பிளி மேடமாம்.
மாடி வீட்டுக்காரரான இவரின் வீட்டுக்கு பூக்கார எம்.பி., சென்றுள்ளார். இதனால் அரசியல் வட்டாரத்தில் புதிய திருப்பம் ஏற்பட்டுள்ளது.
கடந்த அசெம்பிளி தேர்தலில் கை கட்சியின் பிரச்சார பீரங்கியாக கருதப் பட்ட இவரின் வீட்டில், பூக்காரருக்கு அளித்த அன்பான வரவேற்பு, கை காரர்கள் மத்தியில் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
அண்ணார் பார்வை 'பூ' பக்கம் போயிருப்பதால் அவரோட தம்பி வீட்டுக்கு, மாநில கைக்கார தலைவர்களும் தேனீர் விருந்துக்கு சென்று, 'ரெஸ்ட்' எடுத்தாங்களாம்.
குடும்பத்தில் புதுவித பாலிடிக்ஸ் நடத்தி இருக்காங்க. ''மாஜி' செங்கோட்டை 'முனி' அப்செட் ஆகியுள்ளார். அவரும் 'மாஜி' முனிசி., தலைவருடன் செல்போனில் தொடர்புக்கொள்ள முயற்சித்துள்ளார். ஆனால் 'நோ ரெஸ்பான்ஸ்'. இதனால் கோல்டு சிட்டியில் தமது வலதுகரமாக, 'ஸ்டிராங்' ஆதரவாளராக இருந்தவர் நழுவி போய்விட்டதாக முடிவுக்கு வந்துட்டாராம்.
*
பிற்படுத்தப்பட்ட தலைவர்
மீது பல முனை தாக்குதல்!
'மாஜி' முனிசி., தலைவர் கோல்டு மைன்ஸ் விவகாரத்தில் 'ஓப்பன் காஸ்ட் மைன்ஸ்' விவகாரத்தில் கடுமையாக எதிர்ப்பவர். இவருக்கு நேர் மாறாக செயல்படுபவர் செங்கோட்டை 'முனி'. இவருடன் எப்படி ஒத்துப்போக முடியும்.
ஊரே அழிந்து விடும் என்பதை தெரு தெருவாக பிரச்சாரம் செய்ததை 'மாஜி முனிசி., தலைவர் மறந்திடுவாரா அல்லது ஓப்பன் காஸ்ட் மைன்ஸ் விவகாரத்தை கைவிடுமாறு அவரிடம் வலியுறுத்துவாரா.
பூ கட்சியின் பிரச்சாரத்தில் இவர் ஈடுபடுவதாக இருந்தால், ஹிந்துத்துவா கொள்கையுடன் ஒத்துப்போக முடியுமா அல்லது தேவாலயம், சிறுபான்மையினர் சமுதாய பவன் கட்டுவதற்கு பூக்கார ஆட்சியில் தான் கோல்டு சிட்டிக்கு பல கோடிகளை வழங்கிய சாதனைகள் பற்றி புகழ்ந்து பேசுவாரா. மதம் மாறிய கிறிஸ்தவர்களின் ஜாதிய சலுகை உரிமைகளை, மீண்டும் எழுப்புவாரா அல்லது பூக்காரர் கொள்கையின் படி ஒத்துப்போவாரா; ஒதுங்கி நிற்பாரா. இப்படி பிற்படுத்தப்பட்ட சமுதாய தலைவராக உள்ளவரை சுற்றி, பல முனை கேள்விகள் சுழலுகின்றன.
****
ஆக்கிரமிப்புக்கு ஆப்பு!
வரவேற்பும், எதிர்ப்பும்!
அசெம்பிளி மேடமுக்கு வேண்டியவர்கள், சாலை ஆக்கிரமிப்பு செய்திருப்பதை அவர் கண்டுக்கொள்ளாமல் விட்டு விட்டதால், செங்கோட்டை முனி' கொதிச்சிட்டாரு.
இரண்டு நாட்களுக்குள் இடித்து தள்ள வேண்டும் என்று 'கெடு' விதித்தாரு. இல்லையேல், தானே ஜேசிபி இயந்திரத்தை கொண்டு வந்து ஆக்கிரமிப்பு கட்டடத்தை இடிப்பதாக எச்சரித்துள்ளார்.
பொறியாளரை அழைத்து சாலையின் அகலத்தை, நடைபாதை அளவை 'டேப்' பிடித்து, அளந்து முரண்பாட்டை கண்டித்திருக்காரு.
சாலை விதிமுறைப்படி பாகுபாடின்றி, ஒரே சீராக இருக்க வேண்டும் என்று அதிர வைத்திருக்காரு. செங்கோட்டை 'முனி' யின் நேர்மையான நடவடிக்கையை, கவுதம் நகர் ஆதரவாளர்கள் வரவேற்று இருக்காங்க. ஆனால், கைக்கார மேடமின் ஆதரவாளர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளார்கள். ****
அண்ணாமலையார் ஆட்டம்!்
'டபுள் கேம்' காரர்களுக்கு ஆபத்து!
கர்நாடக மாநிலத்தில் பூக்கட்சியில், தேர்தல் இணை பொறுப்பாளராக தமிழக பூக்காரத் தலைவரை கட்சி மேலிடம் நியமித்திருக்காங்க. பெரும்பான்மை தமிழர் நிறைந்த தங்கமான நகர் உட்பட கர்நாடக தமிழர் ஓட்டுகளுக்கு 'ரூட்டு' போட்டாச்சாம்.
கோல்டு சிட்டி தொகுதியில் அண்ணாமலையாரின் நேரடி பார்வையில் எலக் ஷன் வேலைகள் நடக்க போகுதாம். 'டபுள் கேம்' ஆட்டக்காரர்களுக்கு ஆபத்து காத்திருக்குதாம்.
கை காரர்களுக்கு நேரடியான போட்டியாளரா பூ காரர்கள் தான் உள்ளனர். கட்சியை கட்டுக்கோப்பாக கொண்டுச் செல்ல போறாங்களாம்.
வேட்பாளர் பட்டியல் அறிவிப்புக்கு பின் தான், யார் யார் என்ன ஆகப்போகின்றனர் என தெரிய வரும்.
கோலார் மாவட்டத்தில் பூ காரர்களின் நம்பிக்கைக்குரிய தொகுதியை மீட்க , தாமரை மிகுந்த அக்கறை காட்டுகிறதாம்.
அண்ணார் வீட்டில் 'பூ'! தம்பி வீட்டில் 'கை'!
முனிசி., யில் 'மாஜி' தலைவராக இருந்தவர் சூ.பாளையம் சேர்ந்தவர். இவரையும், இவரது வாரிசையும் முனிசி., தேர்தலில் ஜெயிக்க விடாமல் தடுக்க காரணமாக இருந்தவர் கைக்கார அசெம்பிளி மேடமாம்.
மாடி வீட்டுக்காரரான இவரின் வீட்டுக்கு பூக்கார எம்.பி., சென்றுள்ளார். இதனால் அரசியல் வட்டாரத்தில் புதிய திருப்பம் ஏற்பட்டுள்ளது.
கடந்த அசெம்பிளி தேர்தலில் கை கட்சியின் பிரச்சார பீரங்கியாக கருதப் பட்ட இவரின் வீட்டில், பூக்காரருக்கு அளித்த அன்பான வரவேற்பு, கை காரர்கள் மத்தியில் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
அண்ணார் பார்வை 'பூ' பக்கம் போயிருப்பதால் அவரோட தம்பி வீட்டுக்கு, மாநில கைக்கார தலைவர்களும் தேனீர் விருந்துக்கு சென்று, 'ரெஸ்ட்' எடுத்தாங்களாம்.
குடும்பத்தில் புதுவித பாலிடிக்ஸ் நடத்தி இருக்காங்க. ''மாஜி' செங்கோட்டை 'முனி' அப்செட் ஆகியுள்ளார். அவரும் 'மாஜி' முனிசி., தலைவருடன் செல்போனில் தொடர்புக்கொள்ள முயற்சித்துள்ளார். ஆனால் 'நோ ரெஸ்பான்ஸ்'. இதனால் கோல்டு சிட்டியில் தமது வலதுகரமாக, 'ஸ்டிராங்' ஆதரவாளராக இருந்தவர் நழுவி போய்விட்டதாக முடிவுக்கு வந்துட்டாராம்.
பிற்படுத்தப்பட்ட தலைவர் மீதுபல முனை தாக்குதல்!
'மாஜி' முனிசி., தலைவர் கோல்டு மைன்ஸ் விவகாரத்தில் 'ஓப்பன் காஸ்ட் மைன்ஸ்' விவகாரத்தில் கடுமையாக எதிர்ப்பவர். இவருக்கு நேர் மாறாக செயல்படுபவர் செங்கோட்டை 'முனி'. இவருடன் எப்படி ஒத்துப்போக முடியும்.
ஊரே அழிந்து விடும் என்பதை தெரு தெருவாக பிரசாரம் செய்ததை 'மாஜி முனிசி., தலைவர் மறந்திடுவாரா அல்லது ஓப்பன் காஸ்ட் மைன்ஸ் விவகாரத்தை கைவிடுமாறு அவரிடம் வலியுறுத்துவாரா.
பூ கட்சியின் பிரச்சாரத்தில் இவர் ஈடுபடுவதாக இருந்தால், ஹிந்துத்துவா கொள்கையுடன் ஒத்துப்போக முடியுமா அல்லது தேவாலயம், சிறுபான்மையினர் சமுதாய பவன் கட்டுவதற்கு பூக்கார ஆட்சியில் தான் கோல்டு சிட்டிக்கு பல கோடிகளை வழங்கிய சாதனைகள் பற்றி புகழ்ந்து பேசுவாரா. மதம் மாறிய கிறிஸ்தவர்களின் ஜாதிய சலுகைஉரிமைகளை, மீண்டும் எழுப்புவாரா அல்லது பூக்காரர் கொள்கையின் படி ஒத்துப்போவாரா; ஒதுங்கி நிற்பாரா. இப்படி பிற்படுத்தப்பட்ட சமுதாய தலைவராக உள்ளவரை சுற்றி, பல முனை கேள்விகள் சுழலுகின்றன.
ஆக்கிரமிப்புக்கு ஆப்பு!வரவேற்பும், எதிர்ப்பும்!
அசெம்பிளி மேடமுக்கு வேண்டியவர்கள், சாலை ஆக்கிரமிப்பு செய்திருப்பதை அவர் கண்டுக்கொள்ளாமல் விட்டு விட்டதால், செங்கோட்டை முனி' கொதிச்சிட்டாரு.
இரண்டு நாட்களுக்குள் இடித்து தள்ள வேண்டும் என்று 'கெடு' விதித்தாரு. இல்லையேல், தானே ஜேசிபி இயந்திரத்தை கொண்டு வந்துஆக்கிரமிப்பு கட்டடத்தை இடிப்பதாக எச்சரித்துள்ளார்.
பொறியாளரை அழைத்து சாலையின் அகலத்தை, நடைபாதை அளவை 'டேப்' பிடித்து, அளந்து முரண்பாட்டை கண்டித்திருக்காரு.
சாலை விதிமுறைப்படி பாகுபாடின்றி, ஒரே சீராக இருக்க வேண்டும் என்று அதிர வைத்திருக்காரு. செங்கோட்டை 'முனி' யின் நேர்மையான நடவடிக்கையை, கவுதம் நகர் ஆதரவாளர்கள் வரவேற்று இருக்காங்க. ஆனால், கைக்கார மேடமின் ஆதரவாளர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளார்கள்.அண்ணாமலையார் ஆட்டம்!்
'டபுள் கேம்' காரர்களுக்கு ஆபத்து!
கர்நாடக மாநிலத்தில் பூக்கட்சியில், தேர்தல் இணை பொறுப்பாளராக தமிழக பூக்காரத் தலைவரை கட்சி மேலிடம் நியமித்திருக்காங்க. பெரும்பான்மை தமிழர் நிறைந்த தங்கமான நகர் உட்பட கர்நாடக தமிழர் ஓட்டுகளுக்கு 'ரூட்டு' போட்டாச்சாம்.
கோல்டு சிட்டி தொகுதியில் அண்ணாமலையாரின் நேரடி பார்வையில் எலக் ஷன் வேலைகள் நடக்க போகுதாம். 'டபுள் கேம்' ஆட்டக்காரர்களுக்கு ஆபத்து காத்திருக்குதாம்.
கை காரர்களுக்கு நேரடியான போட்டியாளரா பூ காரர்கள் தான் உள்ளனர். கட்சியை கட்டுக்கோப்பாக கொண்டுச் செல்ல போறாங்களாம்.
வேட்பாளர் பட்டியல் அறிவிப்புக்கு பின் தான், யார் யார் என்ன ஆகப்போகின்றனர் என தெரிய வரும்.
கோலார் மாவட்டத்தில் பூ காரர்களின் நம்பிக்கைக்குரிய தொகுதியை மீட்க, தாமரை மிகுந்த அக்கறை காட்டுகிறதாம்.