காஸ் சிலிண்டர் வெடித்து தாய்-, மகன் உட்பட 3 பேர் சாவு

Added : பிப் 05, 2023 | |
Advertisement
கதக்,-காஸ் சிலிண்டர் வெடித்து தீக்காயம் அடைந்த, தாய்-, மகன் உட்பட மூன்று பேர் இறந்தனர்.கதக் தாலுகா முலகுந்து டவுன் சிந்திபேட்ஓனியில் வசித்து வந்தவர் பசவண்ணா, 60. கடந்த ஜனவரி 26 ம் தேதி பசவண்ணாவின் வீட்டில் காஸ் சிலிண்டரில் கசிவு உண்டானது.இதனால் அவரது வீடு முழுவதும், ஒரு வித துர்நாற்றம் வீசியது. இந்த சந்தர்ப்பத்தில் பக்கத்து வீட்டில் வசித்த யசோதா, 31 என்பவர், தன் கன் ஆதர்ஷ்,



கதக்,-காஸ் சிலிண்டர் வெடித்து தீக்காயம் அடைந்த, தாய்-, மகன் உட்பட மூன்று பேர் இறந்தனர்.

கதக் தாலுகா முலகுந்து டவுன் சிந்திபேட்ஓனியில் வசித்து வந்தவர் பசவண்ணா, 60. கடந்த ஜனவரி 26 ம் தேதி பசவண்ணாவின் வீட்டில் காஸ் சிலிண்டரில் கசிவு உண்டானது.

இதனால் அவரது வீடு முழுவதும், ஒரு வித துர்நாற்றம் வீசியது. இந்த சந்தர்ப்பத்தில் பக்கத்து வீட்டில் வசித்த யசோதா, 31 என்பவர், தன் கன் ஆதர்ஷ், ௧௦, உடன் பசவண்ணா வீட்டிற்கு சென்றார். அப்போது எதிர்பாராதவிதமாக காஸ் சிலிண்டர் வெடித்து சிதறியது. பலத்த தீக்காயம் அடைந்த 3 பேரும் சிகிச்சைக்காக ஹுப்பள்ளி கிம்ஸ் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டனர்.

சிகிச்சை பலன் அளிக்காமல் நேற்று ஒருவர் பின் ஒருவராக மூன்று பேரும் உயிரிழந்தனர். யசோதாவுக்கு பிறந்து மூன்று மாதங்களே ஆன பெண் குழந்தை இருப்பது குறிப்பிடத்தக்கது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X