தங்கவயல்,--''வரும் கர்நாடக சட்டசபை தேர்தலில், கூட்டணி வைக்க விருப்பம் தெரிவித்தோம். ஆனால், மாநில காங்கிரஸ் எஙகளை கண்டு கொள்ளவில்லை,'' என அகில இந்திய கம்யூனிஸ்ட் கட்சி இளைஞர் பெருமன்ற கர்நாடக மாநில பொதுச் செயலர் ஹரிஷ் பாலா தெரிவித்தார்.
ராபர்ட்சன்பேட்டையில், கோலார் மாவட்ட இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் ஆலோசனைக் கூட்டம் செயலர் வக்கீல் ஜோதிபாசு தலைமையில் நடந்தது. மாநில இளைஞர் பெருமன்ற பொதுச்செயலர் ஹரிஷ் பாலா, தங்கவயல், தொகுதி செயலர் சிவகுமார், அந்துராஜ், மணிவண்ணன், முரளிதரன் உட்பட பலர் பங்கேற்றனர்.
கூட்டத்திற்கு பின் ஹரிஷ் பாலா அளித்த பேட்டி:
வரும் கர்நாடக சட்டசபை தேர்தலில் காங்கிரசுடன் கூட்டணி வைத்து போட்டியிட, கடிதம் மூலம் விருப்பம் தெரிவித்தோம். ஆனால், மாநில காங்கிரஸ் தலைமை, எங்களை கண்டு கொள்ளவில்லை. எனவே தங்கவயல் உட்பட ஆறு தொகுதிகளில் தனியாக போட்டியிடுவோம்.
கர்நாடக மாநில ஏ.ஐ.டி.யு.சி., சார்பில் 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, வரும் ௮ ம் தேதி, பெங்களூருவிதான் சவுதா முற்றுகை போராட்டம் நடக்கிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
வக்கீல் ஜோதிபாசு கூறுகையில், ''தங்கவயலில் திறந்த வெளி சுரங்கம் அமைப்பதால் ஏற்படும் ஆபத்துக்கள் குறித்து மக்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றோம்.
மாரிகுப்பம் -- குப்பம் ரயில் பாதை திட்டத்தை வலியுறுத்தி பல போராட்டங்கள் நடத்தினோம். பட்ஜெட்டில் தொகை ஒதுக்கப்பட்டுள்ளது.
இது தங்கவயலுக்கு கிடைத்த வெற்றி. மூன்று ஆண்டுகளில் ஒரு முறை கூட, கோலார் பா.ஜ., - எம்.பி., முனிசாமி பேசியதே இல்லை,'' என்றார்.