சர்ஜாபூர்--வீட்டுக்குள் நுழைந்து திருட முயன்ற திருடர்களை தெருநாய்கள் விரட்டி அடித்தது.
பெங்களூரு சர்ஜாபூர் சாலையில் உள்ள கொடத்தி என்ற இடத்தில் நேற்று முன்தினம் நள்ளிரவில் ஒரு மர்ம நபர், யாரும் இல்லாத வீட்டுக்குள் நுழைந்து திருட முயன்றான். இதை கவனித்த தெருநாய்கள், சத்தமாக குரைத்தது. நாய்களின் சத்தம் கேட்டு அப்பகுதியினர் வீட்டை விட்டு வெளியே வந்தனர். இதை பார்த்த திருடன் துளையிடும் இயந்திரம், இரு சக்கர வாகனத்தை அங்கேயே விட்டு தப்பி சென்றார்.
கண்காணிப்பு கேமராக்களை சேதப்படுத்த முயன்றதும் தோல்வியில் முடிந்தது. திருடன் வந்து சென்ற காட்சிகள் கேமராவில் பதிவாகி உள்ளன. இரண்டு நாட்களாக அந்நபர், அப்பகுதியில் நடமாடியதாக பலரும் தெரிவித்தனர்.