திருமழிசை,-திருமழிசை ஜெகந்நாத பெருமாள் மற்றும் 'பக்திஸார்' எனும் திருமழிசை ஆழ்வார் கோவிலில் திருஅவதார மகோற்சவ திருவிழா கடந்த 23ம் தேதி, காலை 4:30 மணி முதல், 5:30 மணிக்குள் பந்தக்கால் முகூர்த்தத்துடன் துவங்கியது.
தினமும் பல்வேறு வாகனங்களில் சுவாமி எழுந்தருளி, பக்தர்களுக்கு அருள்பாலித்து வரும் ஜெகந்நாத பெருமாள் கோவில் தேர்த் திருவிழா இன்று, காலை 7:30 மணிக்கு நடைபெறும்.
கடந்த பிப். 2ம் தேதி இரவு, கருடசேவையில் ஜெகந்நாத பெருமாள் சுவாமியும், ஹம்ஸ வாகனத்தில் திருமழிசை ஆழ்வாரும் எழுந்தருளி, பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.
முன்னதாக நேற்று, காலை 7:00 மணிக்கு பல்லக்கு நாச்சியார்கோலம் ஏழூர் புறப்பாடும், பகல் 11:00 மணிக்கு எண்ணெய் காப்பு திருமஞ்சனம், இரவு 8:00 மணிக்கு யானை வாகனத்தில் வீதியுலாவும் நடந்தது.